‘கலக்கல் ஸ்டார்’ பரமேஸ்வரர் நடித்திருக்கும் ‘சாதனை பயணம்’ திரைப்படம்..!

‘கலக்கல் ஸ்டார்’ பரமேஸ்வரர் நடித்திருக்கும் ‘சாதனை பயணம்’ திரைப்படம்..!

விஜியாலயா பிலிம்ஸ் எஸ்.சந்திரன் பெருமையுடன் வழங்கும், ‘கலக்கல் ஸ்டார்’ பரமேஸ்வரர் தயாரித்து, ஹீரோவாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘சாதனை பயணம்’.

இப்படத்தில் அழகு, சஞ்சு, ஹரிப்ரியா, பேபி தன்யா, வான்யா, கவிஞர் கருப்புராஜா, லிபாலி, முகேஷ், எஸ்.கே.எம்.பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

மாதேஷ்வரா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு மகேஷ் சுப்ரமண்யம், ஆரி இராஜன் இருவரும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். அக்‌ஷய் ஆனந்த் நடனம் அமைக்க, கே.பி.செல்வராஜ் படத் தொகுப்பு செய்திருக்கிறார். சாய் மணி சண்டை காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். மக்கள் தொடர்பாளர் பணியை கோவிந்தராஜ் செய்திருக்கிறார்.

Saathanai Payanam-Movie-Stills-7

சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தினாலும், ஆசையினாலும் சுமார் 15 ஆண்டுகளாக சினிமாவில் பல்வேறு துறைகளில் பயணித்துக் கொண்டிருப்பவர் நாயகன் பரமேஸ்வர்.

பல திரைப்படங்களுக்கு தன்னால் முடிந்த பல உதவிகளை செய்து கொடுத்து வந்திருக்கிறார். அப்படி பலருக்கு உதவி செய்தவர், சொந்தமாக படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்து அதற்கான கதை தேர்வில் ஈடுபட்டிருக்கிறார்.

தயாரிப்பதற்காக கதை கேட்ட பரமேஸ்வரர், தனது கதைக்கு பொருத்தமாக இருந்ததால், அவரே ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று இயக்குநர் மாதேஷ்வரா விருப்பம் தெரிவிக்க, அவரை தொடர்ந்து பலரும் அதையே முன் மொழிய பரமேஸ்வரர் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டார்.

Saathanai Payanam-Movie-Stills-3

மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் எதாவது ஒரு சாதனையை செய்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதுதான் இப்படத்தின் கதைக் கரு.

ஹீரோ என்றாலும், அடிதடி, டூயட் என்று இல்லாமல், கதையின் நாயகனாக பரமேஸ்வரர் நடித்திருக்கும் இந்த ‘சாதனை பயணம்’ திரைப்படம், அனைத்து மக்களுக்கும் பிடித்த படமாக செண்டிமெண்ட், ஆக்‌ஷன், காதல், காமெடி என அனைத்தும் கலந்த குடும்பத்தோடு பார்க்க கூடிய கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.

சாதாரண விவசாயியான பரமேஸ்வரர், தனது உழைப்பால் உயர்ந்து தனது மகள்களை நல்லபடியாக வளர்த்து, அவர்களுக்கு திருமணம் செய்துக் கொடுத்த பிறகு, மகள்களின் சுயநலத்தால் அவர் புறக்கணிக்கப்படுகிறார். இதற்காக துவண்டு போகாமல், மீண்டும் வாழ்க்கையை முதலில் இருந்து வாழத் துவங்கும் பரமேஸ்வரர், தனது உழைப்பால் எப்படி உயர்ந்து சாதிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.

படம் கமர்ஷியலாக இருந்தாலும், திருமணம்வரை பெற்றோர்களின் தயவை எதிர்ப்பார்க்கும் பிள்ளைகள் அதன் பிறகு அவர்களை எப்படி உதாசிணப்படுத்துகிறார்கள். அப்படி அவர்கள் செய்வதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை இயக்குநர் மாதேஷ்வரா அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

Saathanai Payanam-Movie-Stills-1

விவசாயி, இரண்டு மகள்களின் தந்தை, ஊருக்கு கொடுத்து உதவி செய்யும் வள்ளல், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர், என்று நான்கு கெட்டப்புகளில் நடித்திருக்கும் பரமேஸ்வரரின் மெனக்கெடலையும், அவர் இந்த கதாபாத்திரத்தில் வெளிப்படுத்திய நடிப்பையும், பின்னணி இசையமைக்கும்போது பார்த்து வியந்த இசையமைப்பாளர் தஷி, அவருக்கு ’கலக்கல் ஸ்டார்’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளார்.

‘கலக்கல் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் வரும்போது பலர் விமர்சிப்பார்கள். அப்படி விமர்சிப்பவர்களே என்னை ‘கலக்கல் ஸ்டார்’ என்று அழைக்கும் அளவுக்கு ஒரு நடிகராக சினிமாவில் நிச்சயம் சாதிப்பேன் என்று நம்பிக்கையோடு பரமேஸ்வரர் கூறுகிறார்.

‘சாதனை பயணம்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியுள்ளது. இசையமைப்பாளர் தஷியின் இசையமைப்பில் இரண்டு டைட்டில் பாடல்களையும் சேர்த்து படத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளன. இந்த 7 பாடல்களும் திரும்பத் திரும்ப கேட்கும்படியான பாடல்களாக உள்ளன.

Saathanai Payanam-Movie-Stills-8

கவிஞர் முத்துலிங்கம் வரிகளில், ஆதர்ஷ் மற்றும் ஸ்ரீலஷ்மி ஆகியோரது குரலில் உருவான ‘எனக்கென இருப்பது ஒரு சொந்தம்...’ என்ற பாடலும், கவிஞர் சுதந்திர தாஸ் வரிகளில், சஜீஷ், சுமேகா சந்திரன் ஆகியோரது குரலில் உருவான ‘வெட்கத்தவிட்டா வேதனை தீரும்...’, கவிஞர் முத்துலிங்கம் வரிகளில், ஆதர்ஷ் குரலில் உருவான ‘பெத்த சொந்தம்...’ என்று தொடங்கும் பாடல், கவிஞர் சொ.சிவக்குமார் பிள்ளை வரிகளில், பாப் பூர்ணிமா, சார்லஸ் ஆகியோரது குரலில் ‘அச்சப்பட்ட, அச்சப்பட்ட பெண்ணே...’, கவிஞர் சி.வீரமணி வரிகளில், கானா உலகநாதன், வினய்தா ஆகியோரது குரலில் உருவான ‘தாபா தாபா தாபாதான்...’, கவிஞர் கலைவேந்தன் வரிகளில், சங்கர் தாஸ் குரலில் ‘சொல்லப் போறேன், சொல்லப் போறேன்...’, கவிஞர் அமிர்தன் வரிகளில், ரிஷப் குரலில் உருவான ‘வானம் வசப்படும்...’ ஆகிய இந்த 7 பாடல்கள் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற ஹிட் பாடல்களாகியுள்ளன.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். விழாவில் கவிஞர் முத்துலிங்கம், இயக்குநர் பேரரசு இருவரும் இணைந்து படத்தின் இசையை வெளியிட்டனர்.

தற்போது இந்த ‘சாதனைப் பயணம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் பட வெளியீட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.