300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’ திரைப்படம்..!

300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’ திரைப்படம்..!

’டார்லிங்’, ‘100’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில், 4 மங்கிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கூர்கா’.

படத்தின் டிரைலர், டீசர் போன்றவை ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், படத்தை வாங்கி வெளியிட்டிருக்கும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் செய்த விளம்பரமும், இந்தப் படத்தை மக்களிடம் எளிதில் சென்றடைய செய்துள்ளது.

இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், மிகப் பெரிய அளவில் வெளியிட்டிருக்கிறார்.

படத்தின் விளம்பரம் மற்றும் திரையரங்குகளின் எண்ணிக்கை என்று அனைத்திலும் பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கும் ரவீந்தர் சந்திரசேகர், இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான விநியோகஸ்தர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘கூர்கா’ யோகி பாபுவின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்திருக்கிறது.

யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த படங்களிலேயே அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இப்படம், முன்னணி ஹீரோக்கள் படங்களுக்கு நிகராகவும் வெளியாகியிருப்பது ஒட்டு மொத்த கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

இன்று காலை சிறப்பு காட்சியிலேயே ஹவுஸ்புல் காட்சிகளோடு சிறப்பான ஓபனிங் காட்சிகளாகவும் அமைந்திருப்பதால், வசூலுக்குக் குறைவில்லாமல் இருக்கும் என்று படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் கருதுகின்றனர்.

இதன் மூலம் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘கூர்கா’ திரைப்படம், வசூலிலும் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தும் என்று தமிழ்த் திரையுலகில் பேசப்படுகிறது.

Our Score