ஒரு பிரபலமா் இருந்தா என்னத்தையெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு பாருங்க..!
‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்துல ஹீரோயினா நடிசச ஐஸ்வர்யாவை இன்னிக்கு ஸ்டார்ட் ஆக்சன் சொல்லாமலேயே டான்ஸ் ஆட வைச்சிட்டாரு ஒரு பேக் ஐடி முகநூல் நண்பர்..!
ஐஸ்வர்யாவின் பெயரில் ஒரு பேக் ஐடி ஓப்பன் பண்ணிய அந்த புண்ணியவான்.. ஐஸ்வர்யா இப்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்தியா திரும்ப எத்தனித்து ஏர்போர்ட் வந்தபோது கஸ்டம்ஸில் சிக்கிக் கொண்டதாகவும், அவரைக் காப்பாற்ற அவசரமாக அவரது மேனேஜரின் உதவி தேவையென்று சொல்லி மேனேஜரின் போன் நம்பரையும் கொடுத்திருந்தார்கள்.
கூடவே, அந்த மேனேஜர் ஏற்கெனவே ஐஸ்வர்யாவிடம் 12.5 லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டதால் ஐஸ்வர்யா போன் செய்தால் அவர் எடுக்க மறுப்பதால், இதைப் படிக்கும் முகநூல் நண்பர்கள் உடனே அந்த நம்பருக்கு போன் செய்து அந்த மேனேஜரை ஐஸ்வர்யாவுக்கு போன் செய்யச் சொல்லும்படியும் அந்தப் பதிவில் போடப்பட்டிருந்தது..!
காலையில் விடிந்தும், விடியாததுமாக இந்த பேக் ஐடி முகத்தில்தான் முழித்திருக்கிறார் ஐஸ்வர்யா.. இதை எழுதிய பேக் ஐடி பார்ட்டி, கனகச்சிதமாக ஒரிஜினல் ஐஸ்வர்யாவுக்கு இதை டேக் செய்திருப்பதுதான் இந்த விஷயத்தில் பாராட்டத்தக்க ஒன்று.. என்னா தைரியம்..?
ஐஸ்வர்யா பதட்டத்துடன் “இது தன் பெயரில் இருக்கும் போலி ஐடி. தயவு செய்து யாரும் அந்த நம்பருக்கு போன் செய்ய வேண்டாம்..” என்று சொல்லி பதிவு செய்திருந்தார். அந்த மர்ம நபரைப் பற்றியும் பேஸ்புக் நிர்வாகத்திடம் புகார் செய்திருக்கிறாராம்..!
உண்மையான அந்த போன் நம்பரை வைத்திருந்த நபர் என்ன கதிக்கு ஆளானோரோ தெரியவில்லை..!