ஹலோ பாஸ் – திரை முன்னோட்டம்

ஹலோ பாஸ் – திரை முன்னோட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘நான் அடிமை இல்லை’, ‘அடுத்த வாரிசு’ மற்றும் ஹிந்தி ‘கங்குவா’ போன்ற படங்களை தயாரித்த, பிரபல நடிகர் துவாரகீஷின் ‘துவாரகீஷ் சித்ரா பட நிறுவனம்’ தயாரித்திருக்கும் படம் ‘ஹலோ பாஸ்’.

இது கன்னடத்தில் ‘விஷ்ணுவர்த்தனா’ என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம். இப்போது ‘ஹலோ பாஸ்’ என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. பிரியாமணி இரட்டை வேடத்தில் நடித்த ‘சாருலதா’ படத்திற்கு முன்பு இயக்குனர் பொன்குமரன் இயக்கிய முதல் படம் இது. வசூலில் சூப்பர் ஹிட்  மற்றும் பல விருதுகளையும், சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றுத் தந்த படம் இது.

இதில் ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்த சுதீப் கதாநாயகனாக நடித்திருக்கிறார். சுதீப்புக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்த படமும் இதுதான். கதாநாயகிகளாக பிரியாமணி – பாவனா நடித்திருக்கிறார்கள். மற்றும் சோனுசூட், ஆர்த்தி மற்றும் துவாரகீஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –   ராஜரத்னம்

இசை    –   ஹரி கிருஷ்ணா

வசனம்   –  சீனிவாசமூர்த்தி

இணை தயாரிப்பு   –  யோகேஷ்

தயாரிப்பு   –  துவாரகீஷ்

கதை, திரைக்கதை, இயக்கம்  – பொன்குமரன்

“சாதாரணமான ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் மிகப் பெரிய தாதா ஒருவனிடம் மோதும் அதிரடி ஆக்ஷன் படம் இது. இந்த படம் வெளியானபோது படத்தை பார்த்த விஜய் தமிழில் ரீமேக் செய்து நடிக்க ஆசைப்பட்டார். சில காரணங்களால் அப்போது முடியாமல் போய்விட்டது அந்த அளவிற்கு கமர்ஷியல் படம் இது..” என்கிறார் பொன்குமரன்.

இந்த பொன்குமரன்தான், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்தப் படத்தின் வசனகர்த்தா என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score