தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனான இயக்குநர் விஜய்யும், நடிகை அமலாபாலும் காதலிப்பதாக நீண்ட காலமாகவே மீடியாக்கள் கூவிக் கொண்டிருந்தன. இரண்டு பேருமே இதனை மறுக்கவில்லை. ஆனால் பதில் சொல்லத்தான் மறுத்தார்கள்.
நேற்றைய முன்தினம் நடந்த விஜய் இயக்கிய ‘சைவம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்கூட இந்தப் படத்தில் நடிக்கவில்லையென்றாலும்கூட அமலாபால் கலந்து கொண்டார். இதனை வைத்து நிச்சயமாக விஜய்-அமலாபால் கல்யாணம் நடக்கத்தான் போகிறது என்கிறார்கள்.
அன்றைய விழாவில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், அமலாபாலையும், விஜய்யையும் இணைத்து வைத்து பேசினார். இதற்கு விஜய் எந்த மறுப்பையும் மேடையில் தெரிவிக்கவில்லை. ஸோ.. இவர்களின் காதல் கன்பார்ம் என்கிறது மீடியா.
இன்றைக்குக் காலையில் பல இணையத்தளங்களில் இருவரும் திருமணம் செய்யப் போவதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்க இன்று மாலை நடிகை அமலாபால் ஒரு செய்தியொன்றை மீடியாவுக்குத் தட்டி விட்டிருக்கிறார்.
அதில்,
என்று கூறியிருக்கிறார். ஆக, கிளிகள் காதலில் மாட்டியிருப்பது போல் தெரிகிறது..!
‘வாழ்க வாழ்க’ என்று இவர்களை வாழ்த்திவிட்டு, இனி அடுத்த காதல் ஜோடியைத் தேட வேண்டியதுதான்..!