full screen background image

சினிமா பி.ஆர்.ஓ.க்கள் சங்கத்திற்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது

சினிமா பி.ஆர்.ஓ.க்கள் சங்கத்திற்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது

தமிழ்ச் சினிமாவில் ‘பி.ஆர்.ஓ.க்கள்’ என்றழைக்கப்படும் பத்திரிகை தொடர்பாளர்களின் சங்கமான ‘தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்க’த்திற்கு நாளை தேர்தல் நடைபெற இருக்கிறது.

2 வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்குத் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தற்போது இரண்டு அணிகளாக நிற்கின்றனர். முன்னாள் தலைவரான டைமண்ட் பாபு தலைமையில் ஒரு அணியும், முன்னாள் செயலாளர் ஜான் தலைமையில் ஒரு அணியும் தற்போது போட்டியிடுகிறது.

டைமண்ட் பாபு அணியில் தலைவர் பதவிக்கு அவரே போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு யுவராஜ் போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு ஆனந்த் போட்டியிடுகிறார்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு வி.கே.சுந்தரும், ராஜ்குமாரும், இணைச் செயலாளர்கள் பதவிக்கு முத்துராமலிங்கமும், கணேஷூம் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு, ‘திரைநீதி’ செல்வம், ‘மதிஒளி’ குமார், இனியன் ராஜன், சரவணன், புவன், செய்யது இப்ராஹிம், தர்மதுரை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஜான் தலைமையிலான அணியில் அவரே தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு விஜயமுரளி போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு குமரேசன் போட்டியிடுகிறார்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு மதுரை செல்வம், கோவிந்தராஜ் இருவரும் போட்டியிடுகின்றனர். இணைச் செயலாளர்கள் பதவிக்கு ராமானுஜம், செல்வரகு இருவரும் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு, கடையம் ராஜூ, ‘கிளாமர்’ சத்யா, வெங்கட், சாவித்திரி, வி.எம்.ஆறுமுகம், நித்திஷ் ஸ்ரீராம், பிரியா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரையிலும் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில்  நடைபெறவுள்ளது.

வாக்குப் பதிவு முடிந்த உடனேயே ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Our Score