இதுவரையில் தமிழ்ச் சினிமாவில் வராத டைட்டில் ரோமியோ ஜூலியட்..!

இதுவரையில் தமிழ்ச் சினிமாவில் வராத டைட்டில் ரோமியோ ஜூலியட்..!

காதலையும் காதலர்களையும் அடையாளப்படுத்த ‘ரோமியோ ஜூலியட்’  என்ற பெயரை காலம் காலமாக உபயோகப்படுத்தி வருகிறோம். அப்படிப்பட்ட கவித்துவமான ‘ரோமியோ ஜூலியட்’   என்ற தலைப்பை இதுவரையிலும் எந்த படத்துக்கும் சூட்டாமல் விட்டுவைத்தது  ஆச்சர்யம்தான்.

இப்படி ஒரு அருமையான காதல் தலைப்பை எஸ்.நந்தகோபால் வழங்க மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு சூட்டி அந்தப் பெருமையை பெற்றிருக்கிறார், ஆர்யா நடித்த ‘கலாபக்காதலன்’, ஜீவன் நடித்த ‘மச்சக்காரன்’, எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘நியூட்டனின் 3-ம் விதி’ போன்ற படங்களை தயாரித்த எஸ்.நந்தகோபால்.

‘ரோமியோ ஜூலியட்’  படத்தின் கதாநாயகனாக ஜெயம் ரவி நடிக்கிறார். கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் அனைவருமே முன்னணி நடிகர்களே.

ஒளிப்பதிவு    –     எஸ்.சௌந்தர்ராஜன்

இசை   –   இமான்

கலை   –  மிலன்

சண்டைப் பயிற்சி   –   திலீப் சுப்பராயன்

எழுத்து-இயக்கம் –  லஷ்மண்.

இவர் பல விளம்பரப் படங்களை இயக்கியிருப்பதுடன் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் லஷ்மண் சொல்லும்போது, “பேண்டஸியான  காதல் கதை இது. ஜாலியான காதலை எப்படி ஜாலியாக சொல்கிறோம் என்பது திரைக்கதை. இந்த 2014-ல் 1947-களில் இருந்த ஒரு கவித்துவமான காதலை எதிர்பார்க்கும் ஹீரோ… இதே 2014-ம் ஆண்டிலேயே 2025-ல் தான் வாழ்கையை எப்படிப் பாதுகாப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கால்குலேட்டிவாக யோசிக்கும் ஹீரோயின்.. இவர்களுக்கிடையே ஏற்படும் சுவாரஸ்யமான காதலை ஜாலியாக சொல்வதுதான் இந்தப் படம்…” என்றார்.

“ஒரு வருடத்தில் வெளியாகும் படங்களில் பெரும்பாலானவை காதலை மையப்படுத்தியதாகவே இருக்கின்றனது. இந்த ‘ரோமியோ ஜூலியட்’  என்ற தலைப்பை மட்டும் எப்படி விட்டு வைத்தார்கள் என்பது ஆச்சர்யமான விஷயம். ஒருவேளை இந்தத் தலைப்பு இந்த படத்திற்காகவே காத்திருந்துச்சோன்னு தெரியலை..” என்கின்றனர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்.

Our Score