இயக்குநர் ஏ.வெங்கடேஷின் ‘ரொம்ப நல்லவன்டா நீ’ படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட்..!

இயக்குநர் ஏ.வெங்கடேஷின் ‘ரொம்ப நல்லவன்டா நீ’ படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட்..!

இயக்குனர் A. வெங்கடேஷ் இயக்கத்தில் அடுத்த வாரம் வெளிவரவுள்ள ‘ரொம்ப நல்லவன்டா நீ’ திரைப்படம் சென்சாரில் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது.

சின்னத்திரை மற்றும் வானொலியில் ரசிகர்களை கவர்ந்திருந்த மிர்ச்சி செந்தில் இப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ‘ரோபோ’ சங்கர், ஸ்ருதி பாலா, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஜான் விஜய் என்ற நகைச்சுவை பட்டாளத்துடன் நடித்த அனுபவங்களை மகிழ்ச்சியுடன் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் மிர்ச்சி செந்தில்.

“இயக்குனர் வெங்கடேஷ் சார் என்னை முதலில் கதை சொல்ல அழைத்தபோது, ஒரு பொறி கலங்கும் ஆக்ஷன் படமாக இருக்கும். நாமளும் பிண்ணி பெடல் எடுக்கலாம் என்று நினைத்துதான் சென்றேன். வெங்கடேஷ் சார் என்னை பார்த்தவுடன் சொன்ன முதல் வார்த்தை, ‘இது ஒரு காமெடி- த்ரில்லர் படம் உங்களுக்கு இது செட் ஆகும்’ என்று ஆரம்பித்தார்.

கதையை கேட்டு வயிறு வலிக்க சிரித்து கொண்டு இருந்தேன். இப்படத்தில் சென்னையில் வேலை செய்யும் ஒரு அமைதியான கிராமத்து இளைஞனாக வருகிறேன். புதுமுகம் ஸ்ருதி பாலா எனக்கு கதாநாயகியாக வருகிறார். ரொம்ப நல்லாவே நடித்திருக்கிறார். சர்வஜித் வில்லனாக நடித்திருக்கிறார்..

வெங்கடேஷ் சாருடன் பணி புரிந்தது ஒவ்வொரு நாளும் ஒரு  புது பாடமாக   இருந்தது. எல்லா நடிகரையும் சமமாக பார்க்க கூடிய மனிதர் அவர். சினிமாவை நன்கு அறிந்தவர்.

இப்படம் அவரது முந்தைய படங்களிலிருந்து மிக வித்தியாசமாய் இருக்கும். இது குடும்பத்துடன் ரசிக்கும்படியான நல்ல படம். படம் ‘யு’ சர்டிபிகேட் பெற்றுள்ளதே இதற்கு சான்று.

எனக்கு இந்த படத்தில் வாய்ப்பளித்த ராண்டேவோ மூவி மேக்கஸ் மற்றும் வெங்கடேஷ் சார் ரெண்டு பேரும் ‘ரொம்ப நல்லவங்க சார்” என்று தனக்கே உரித்தான நகைச்சுவையோடு கூறினார் நடிகர் மிர்ச்சி செந்தில்.  

 

Our Score