சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி இயக்குநர் ராம்கோபால்வர்மாவின் மோசமான கமெண்ட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி இயக்குநர் ராம்கோபால்வர்மாவின் மோசமான கமெண்ட்..!

பாலிவுட் இயக்குநர் ராம்கோபால்வர்மா கொஞ்சம் வித்தியாசமானவர். யாரெல்லாம் சூப்பர் ஸ்டார்களோ அவர்களையெல்லாம் தனக்குக் கொஞ்சமும் பிடிக்காது என்பார். ஒரு முறை மம்மூட்டியின் டூயட் பாடலைப் பார்க்கும் இன்னுமொரு தென்னை மரமும் வளைந்து நெளிந்து ஓடுவது போல தெரிகிறது என்று கமெண்ட் அடித்திருந்தார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி என்றாலே ராம்கோபால்வர்மாவுக்கு வேப்பங்காய்தான்.. எப்போதெல்லாம் தெலுங்கில் வர்மா படம் செய்கிறாரோ அப்போதெல்லாம் சிரஞ்சீவியை வம்பிழுக்காமல் இருப்பதில்லை. சமீபத்தில்கூட “சிரஞ்சீவி அரசியலில்கூட நடிக்கத் தகுதியில்லாதவர்..” என்று சொல்லியிருந்தார்.

அமிதாப்பச்சன் வர்மாவின் படங்களில் நடிப்பதற்கு முன்பு வர்மாவுக்கு பிடிக்காத நபர்தான்.. “தர்மேந்திராவோடு ஒப்பிட்டால் அமிதாப் ஒண்ணுமேயில்லை” என்று சொன்னவர்தான் இந்த வர்மா. வர்மாவின் படங்களில் அமிதாப் நடித்தவுடன் இப்போது “அமிதாப் என்னுடைய காட்பாதர்…” என்கிறார்..

இதுவரையில் தமிழ் ஹீரோக்கள் பற்றி கமெண்ட் எதையும் சொல்லாத வர்மா, இ்பபோதுதான் முதல்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி திருவாய் மலர்ந்திருக்கிறார்.

இவர் அவர் அளித்திருக்கும் ட்வீட் இது :

“ரஜினிகாந்தின் மார்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அவற்றை 3-டி அனிமேஷன் மூலமாக விரிவடையச் செய்ய அவர் ஏன் முன் வந்தார் என்பதைதான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கோச்சடையானில் எனக்கு சிக்கல் தரும் அம்சமே இதுதான்…”

என்னவொரு கிண்டல் பாருங்க..!?

“எனக்கு பெண்களை படுக்கையில் பயன்படுத்தத்தான் பிடிக்கும்.. வேறு எந்த வகையிலும் பெண்கள் எனக்குத் தேவையில்லை…” என்று சொன்ன இயக்குநர் ராம்கோபால்வர்மாவின் இந்த ரஜினி பற்றிய கமெண்ட் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை..!

Our Score