ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்றதுக்குள்ளயே கண்ணு முழி பிதுங்கிரும்.. இதுல ஒரே நேரத்துல 3 படங்களை வாங்கி அதை ஒரே நாளில் ரிலீஸ் செய்யவிருக்கும் விநியோகஸ்தரைப் பத்தி கேள்விப்பட்டா என்னா தில்லுன்னுதானே கேக்கத் தோணுது..!
ஜே.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் கம்பெனியின் உரிமையாளர் ஜே.சதீஷ்குமார்தான் அந்தத் தயாரிப்பாளர். இவர், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’, ‘ஆரோகணம்’, ‘கடல்’, ‘தங்கமீன்கள்’ போன்ற படங்களை வாங்கி வெளியிட்டிருக்கும் பிரபலமான விநியோகஸ்தரும்கூட.
அந்த அனுபவத்தில் தன்னால் இந்தப் படங்களை குறுகிய கால இடைவெளியில் வெளியிட்டு லாபம் சம்பாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையில் மூன்று படங்களையும் ஒரே நேரத்தில் வாங்கியிருக்கிறார். இவற்றை ஒரே நாளில்தான் வெளியிடவும் போகிறாராம்..!
சிவப்பு எனக்கு பிடிக்கும்
இன்றைய காலகட்டத்தில் சிறு பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு அதிக அளவில் ஆளாக்கப்படுகிறார்கள். குழந்தைகளைத் துன்புறுத்தும் அந்த மனித மிருகங்களின் பிடியிலிருந்து பெண் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என்ற கருத்தை ஆணித்தரமாகக் கூறும் படம்தான் இந்த ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்.’
பாலியல் வன்முறைகள் அதிகம் நடக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த வன்முறைகளைக் குறைக்க ரெட்லைட் ஏரியாவை உருவாக்குவதுதான் சரியான தீர்வு என்றும், அதனால் நாட்டில் பாலியல் குற்றங்கள் பெருமளவு குறையும் என்பதையும் இப்படத்தின் மூலம் இயக்குநர் சொல்லியிருக்கிறார்.
சாண்ட்ரா ஏமி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை யுரேகா இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு ‘மதுரைச் சம்பவம்’ என்னும் படத்தை இயக்கியவர். சிவசரவணன் மற்றும் அமிஷ் யுவனி இருவரும் இசையமைத்துள்ளனர்..
Cast: Youreka, Sandra Emi
Director: Youreka
Produced By: JSK Film Corporation
Music Director: Siva Saravanan, Anish Yuvani
Cinematography: Maheshwaran
Editing: Wilsi
PRO: Nikkil
ஆள்
பொதுவாக நம் நாட்டில் ஏதாவதொரு அசம்பாவிதம் அல்லது குண்டு வெடிப்பு நடைபெற்றால் சிலர் இது ஒரு முஸ்லீம் மதத்தவரின் செயலாகத்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகிறார்கள். அசம்பாவிதச் செயல்களை செய்பவர்களை அழிக்கவும் பல முஸ்லீம் நண்பர்கள் இருக்கிறார்கள் என்னும் கருத்தை உணர்த்தும் படம்தான் இந்த ஆள்.
ஒரு சில தீவிரவாதிகளின் செய்கையால் ஒட்டு மொத்த முஸ்லீம் மதத்தினரை குறை கூறுதல் தவறு என்பதை உணர்த்தும்விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. விறுவிறுப்பான படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் வித்தார்த், ஹர்திகா பெட்டி மற்றும் சிலர் நடித்துள்ளனர். ஆனந்த கிருஷ்ணன் இயக்க, ஜோஹன் இசையமைத்திருக்கிறார்.
Directed by AnandaKrishnan
Produced by JSK Film Corporation
Starring Vidharth / Hardhika Shetty
Music by Johan
Cinematography N.S.Uthaya Kumar
Editing by M.Ramesh Bharathi
Pro Nikkil
மேகா
முழுக்க முழுக்க காதலை உணர்த்தும் படம் ‘மேகா’. இப்படம் சஸ்பென்ஸ், த்ரில்லர் கலந்த காதல் கதை. இசைஞானி இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காக இசையமைத்து இறுதியில் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட ‘புத்தம் புது காலை’ பாடல் புது வடிவில் அனிதாவின் மென்மையான குரலில் பாடப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தை இயக்கியவர் கார்த்திக் ரிஷி. இவர் பிரபல இயக்குனர் சுப்ரமணியம் சிவாவிடம் உதவி இயக்குநராய் பணியாற்றியவர். அஷ்வின் கக்குமனு நாயகனாகவும், ஸ்ருஷ்டி நாயகியாகவும் நடித்திருக்கின்றனர்.
Directed by Karthick Rishi
Produced by JSK Film Corporation
Starring Ashwin Kakumanu / Srushthi
Music by Isaignani Ilayraja
Cinematography R.B Gurudev
Pro Nikkil
இவருடைய தன்னம்பிக்கைக்கு நமது பாராட்டுக்கள்..!