வசந்த் ராமசாமியின் ‘ஸ்ரீஅன்னமார் புரொடக்சன்ஸ்’ மற்றும் இயக்குநர் S.P.ஹோசிமினின் ‘ஹோசிமின் புரொடக்சன்ஸ்’ இணைந்து தயாரிக்கும் ‘ரெயின்போ’ திரைப்படம் இன்று காலை சென்னையில் பூஜையுடன் துவங்கியது.
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநரான S.P.ஹோசிமின் பரத் நடித்த ‘பிப்ரவரி 14’, சாந்தனு பாக்யராஜ், சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘ஆயிரம் விளக்கு’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர்.
இவரின் இயக்கத்தில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளரான டாக்டர் ஐசரி கணேஷின் தயாரிப்பில், ஜப்பானிய சுமோ வீரரான Yoshinori Tashiro, மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், யோகி பாபு, V.T.V.கணேஷ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சுமோ’ படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் ஹோசிமின் தனது அடுத்த படத்தைத் துவக்கியிருக்கிறார். படத்திற்கு ‘ரெயின்போ’ என்று பெயர் வைத்திருக்கிறார்.
இந்த ‘ரெயின்போ’ படத்தில் ‘BIG BOSS’ புகழ் நிரூப் ஏழு கதாநாயகிகளுடன் நடிக்கிறார். இப்படத்தில் வானத்தில் தோன்றும் வானவில் ஒரு பிரதான கதாபாத்திரமாக வருகிறது.
இப்படத்தில் சிம்ரன் ராஜ் உள்ளிட்ட ஆறு முன்னனி கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மேலும் மைம் கோபி, மனோபாலா, சார்லஸ் வினோத் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கவுள்ளனர்.
ஒளிப்பதிவு – வினோத் குமார், இசை – சுபாஷ் ஆனந்த், பத்திரிகை தொடர்பு – நிகில் முருகன்.
இயக்குநர் S.P.ஹோசிமினிடம் உதவி இயக்குநராக இருந்த விவேக் கைபா பட்டாபிராம் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரான ரவி வர்மன், அயலான் படத்தின் இயக்குநரான R.ரவிக்குமார், இயக்குநர் R. மாதேஷ், ஜப்பான் தொழிலதிபர் குறிஞ்சி செல்வன், ‘பிக்பாஸ்’ புகழ் அபினய், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்கள்.
பிரம்மாண்ட பொருட் செலவில் பரபரப்பான திரைக்கதையில் FANTASY COMEDY படமாக இந்த ‘ரெயின்போ’ படம் உருவாகிறது.