மத்திய அமைச்சர் மகன் மீது நடிகையின் கற்பழிப்பு புகார்..!

மத்திய அமைச்சர் மகன் மீது நடிகையின் கற்பழிப்பு புகார்..!
தன்னை திருமணம் செய்துவிட்டு, தற்போது வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடாவின் மகன் மீது கன்னட நடிகை மைத்திரி குற்றம் சாட்டி இருக்கிறார்.
sadanenda gowda

மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்து வருபவர் சதானந்த கவுடா. இவருடைய மகன் கார்த்திக் கவுடா. இவருக்கும் குடகு மாவட்டம் சோமவார் பேட்டை தாலுகா, குஷால் நகரை சேர்ந்த நானய்யா என்பவரின் மகள் சுவாதிக்கும் நேற்று காலையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

Sadananda-Gowdas-son_CNN-IBN

இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த ஒரு சில மணி நேரத்தில் கன்னட நடிகையான மைத்திரி தனியார் தொலைக்காட்சியொன்றில் பரபரப்பு பேட்டி அளித்தார்.

Maitriya-Stills-1

அப்போது அவர், “நானும் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக்கும் எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பன் ஒருவன் மூலமாக அறிமுகமானோம். முதலில் நண்பர்களாக பழகி வந்தோம். பின்னர் காதலர்களாக மாறினோம்.

கடந்த ஜூன் 5–ந் தேதி மங்களூரில் வைத்து என்னை கார்த்திக் திருமணம் செய்து கொண்டு என்னுடன் செக்ஸ் உறவும் வைத்துக் கொண்டார். இப்போது என்னை ஏமாற்றிவிட்டு, வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்..“ என்று குற்றம்சாட்டினார்.

karthick gowda-maithriya

மேலும் கார்த்திக்கும், நடிகை மைத்திரியும் இருக்கும் புகைப்படங்களும் தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் கார்த்திக்குடன் திருமணம் நடந்ததற்கான ஆதாரம் எதையும் நடிகை மைத்திரி வெளியிடவில்லை. நாங்கள் கடவுள் சாட்சியாக திருமணம் செய்து கொண்டோம் என்று மட்டுமே கூறினார்.

இதைத் தொடர்ந்து நேற்று இரவு பெங்களூர் ஆர்.டி.நகர் போலீஸ் நிலையத்தில் கார்த்திக் மீது நடிகை மைத்திரி புகார் கொடுத்து உள்ளார்.

அந்த புகாரில் “தெய்வத்தை சாட்சியதாக வைத்து கார்த்திக் என்னை திருமணம் செய்தார். ஆனால் தற்போது அவர் வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அந்த புகாரில் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கார்த்தி கவுடா மீது  பிரிவு 376(கற்பழிப்பு) மற்றும் பிரிவு 420(ஏமாற்றுதல்) கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகை மைத்திரியின் இந்தக் குற்றச்சாட்டை கார்த்திக் திட்டவட்டமாக மறுத்துள்ளார். “நடிகை மைத்திரியுடன் இருப்பது நான் அல்ல. மைத்திரியுடன் நான் இருப்பது போன்ற புகைப்படங்கள் கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது…” என்று கார்த்திக் கவுடா தெரிவித்துள்ளார்.

மத்திய மந்திரி சதானந்த கவுடா இது பற்றி கூறுகையில், “அந்த பெண் கூறிய புகாரால் அதிர்ச்சி மற்றும் மிகுந்த காயம் அடைந்ததாகவும் இந்த சம்பவத்தில் மிகப் பெரிய அரசியல் சதி இருக்கலாம்..” என சந்தேகிப்பதாகும் தெரிவித்தார்.

மேலும், “நான் மிகுந்த காயம் அடைந்துள்ளேன். எனது வாழ்க்கை எப்போதுமே திறந்த புத்தகமாகத்தான் உள்ளது. நான் பொய் சொல்ல போவதுமில்லை. அல்லது பொதுமக்களை ஏமாற்ற போவதுமில்லை. இது போன்ற மிரட்டல்களால் நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன்..” என்றும் தெரிவித்துள்ளார்.

சதானந்த கவுடா கடந்த 2011-ம் ஆண்டு எடியூரப்பாவிற்கு பின்பு கர்நாடக மாநில முதல்வராகப் பொறுப்பேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score