full screen background image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ திரைப்படம்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ திரைப்படம்

கே.ஜி.எஃப்-1,2′, ‘காந்தாரா’ வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் தமிழ் படம் ‘ரகு தாத்தா’.

ஒரு இளம் பெண் தன்னைச் சார்ந்தவர்களையும், தன் நிலத்தையும், அடையாளத்தையும் காக்கும் போராட்டத்தில் தன்னையே அறிந்துக் கொள்ளும் சவாலான பயணத்தை, நகைச்சுவை கலந்து, கூறும் பொழுது போக்கு சித்திரம்தான் இத்திரைப்படம்.

இத்திரைப்படத்தில் ‘நடிகையர் திலகமாக’ வாழ்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, வெற்றியையும் விருதுகளையும் வாரி குவித்த ‘பேமிலி மேன்’ வலை தொடரின் எழுத்தாளர் சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஹோம்பாலே பிலிம்ஸின் வெற்றி ரகசியமான திறமை மிக்க குழுவும், தகுதியான நடிகர்களும் ரகு தாத்தாவிற்கும் கிடைத்துள்ளனர்.

M.S.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவில், ராம்சரண்தேஜ் லாபானி கலை இயக்கத்தில், ‘ஜெய் பீம்’ புகழ் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில், தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி வடிவமைப்பில், T. S. சுரேஷ் படத் தொகுப்பில் உருவாகிறது ‘ரகு தாத்தா’.

Raghu Thaatha_FINAL WORK

அடுத்தாண்டு கோடையில் திரையரங்குகளை சிரிப்பொலியாக்க, இம்மாதத்திலிருந்து விறுவிறுப்பான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பேசும்போது, “இந்த ரகு தாத்தா நகைச்சுவை பட மட்டுமின்றி, தைரியமிக்க, துணிச்சலான பெண் தன் கொள்கைகளுக்காக நடத்தும் போராட்டத்தில் தன் தனித்துவத்தை கண்டுகொள்ளும் களமானது, மற்றவர்களுக்கும் ஓர் உத்வேகமாக திகழும். நாயகி எதிர்கொள்ளும் சவால்கள் அவரின் அடையாளத்தை எவ்வாறு வெளிக்கொணர்கிறது என்பதை நகைச்சுவை கலந்து, குடும்பத்திலுள்ள  அனைவரையும் ரசித்து, சிரிக்க வைக்கும்படி இருக்கும். இக்கதாபாத்திரத்திற்கு உயிர் தர கீர்த்தியை போன்ற திறமைமிக்க ஓர் நடிகையால்தான் முடியும். அவருடன் இணைந்து பணிபுரிவதில் மட்டற்ற மகிழ்ச்சி’..” என்றார்.

  •  
Our Score