full screen background image

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நாயகனாக நடிக்கும் ‘மாஸ்க்’ திரைப்படம்..!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நாயகனாக நடிக்கும் ‘மாஸ்க்’ திரைப்படம்..!

இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனியின் தயாரிப்பில், நடிகர் கவின் நடிக்கும் ‘மாஸ்க்’ திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது!

‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘கொடி’, ‘வட சென்னை’ உட்பட பல வெற்றி படங்களை தயாரித்த கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி, பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘மாஸ்க்’. இந்தப் படத்தின் மூலம் நிர்வாக தயாரிப்பாளர் S.P.சொக்கலிங்கம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

இத்திரைப்படத்தின் கதாநாயகனாக நடிகர் கவின் நடிக்கிறார். இவருடன் ஆண்ட்ரியா சார்லி, ருஹானி ஷர்மா, பால சரவணன் மற்றும் அர்ச்சனா சந்தோக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

தயாரிப்பு நிறுவனம் – கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ், எழுத்து மற்றும் இயக்கம் – விகர்ணன் அசோக், இசை – ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர், படத் தொகுப்பு – ஆர்.ராமர், கலை இயக்கம் – ஜாக்கி, ஆடை வடிவமைப்பு – பூர்த்தி மற்றும் விபின், படங்கள் – சாய்  சந்தோஷ், தயாரிப்பாளர்கள் – வெற்றிமாறன் மற்றும் S.P.சொக்கலிங்கம், பத்திரிக்கை தொடர்பு – ரியாஸ் K அஹ்மத்.

அறிமுக இயக்குநரான விகர்ணன் அசோக் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இவர் ‘தருமி’ என்ற குறும் படத்திற்காக பிஹைன்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் விருது விழாவில் சிறந்த குறும் படத்திற்கான விருதை வென்றுள்ளார்.

இன்று ‘மாஸ்க்’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது.

இந்த ‘மாஸ்க்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் சென்னையில் துவங்குகிறது.

Our Score