full screen background image

கல்லூரிகளில் நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘காலேஜ் ரோடு’ படம்

கல்லூரிகளில் நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘காலேஜ் ரோடு’ படம்

MP எண்டர்டெயின்மெண்ட்  நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்களான பிரவீன் மற்றும் சரத் மற்றும் ஜனா துரைராஜ். மனோகர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காலேஜ் ரோடு’.

இந்தப் படத்தில் ‘கபாலி’, ‘பரியேறும் பெருமாள்’, ‘கஜினிகாந்த்’, ‘V1’, ‘டானாக்காரன்’, மற்றும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும் மோனிகா, ஆனந்த் நாகு, KPY அன்சர், அக்சய் கமல், பொம்மு லக்‌மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அறுவி பாலா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இசை – ஆப்ரோ, ஒளிப்பதிவு – கார்த்திக் சுப்ரமணியம். படத் தொகுப்பு – அசோக்எழுத்து, இயக்கம் – ஜெய் அமர்சிங்.

“இன்றைய கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினையைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது. இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியமும், அந்த கல்வி இன்று என்னவாக இருக்கிறது? அது அனைவருக்குமானதாக இருக்கிறதா? எதிர்கால சந்ததியினருக்கு கல்வி என்னவாக இருக்கப் போகிறது என்பதைப் பற்றிப் பேசுகிற படமாக இருக்கும்.

பரபரப்பான திருப்பங்களோடு காதல், நட்பு, நகைச்சுவை கலந்த கமர்சியலான படமாகவும் இருக்கும். கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து இத்திரைப்படத்தை எடுத்துள்ளோம்” என்கிறார் படத்தின் இயக்குநரான ஜெய் அமர்சிங்.

இந்தப் படத்தை பார்த்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். மேலும் படம் பார்த்த கல்லூரி மாணவர்களும் பெரிதும் பாராட்டியுள்ளனர். 

PVR நிறுவனம் இந்தப் படத்தை வரும் டிசம்பர் 30-ம் தேதி வெளியிடுகிறது.

Our Score