full screen background image

ராகவா லாரன்ஸை இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார்..!

ராகவா லாரன்ஸை இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார்..!

பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து விநியோகித்துள்ள டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ரவீந்திரன், ஏ.ஆர்.என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார்.

வெற்றிப் பட இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ள இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இதுவரை ஏற்றிராத மாஸான சிறப்பு கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இவரது உடன் பிறந்த தம்பியான எல்வின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு ராகவா லாரன்சின் பிறந்த நாளான இன்று வெளியாகியுள்ளது.

அதிரடி ஆக்ஷன், கலகலப்பான காமெடி, மனதைத் தொடும் எமோஷன் நிறைந்த இந்த புதிய திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் இதர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Our Score