பிரியாமணி நடிப்பில் 5 மொழிகளில் தயாராகும் ‘கொட்டேஷன் கேங்’ திரைப்படம்

பிரியாமணி நடிப்பில் 5 மொழிகளில் தயாராகும் ‘கொட்டேஷன் கேங்’ திரைப்படம்

ஃபிலிமினாடி எண்டர்டெயின்மெண்ட்(Filminaty Entertainment) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் காயத்ரி சுரேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’.

ரமேஷ் பப்புலா அவர்களின்  மார்ஸ் எண்டர்டெயின்மெண்ட்(Mars Entertainment) நிறுவனமும் இந்த திரைப்படத்தினை இணைந்து தயாரிக்கிறது.

பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று 5 மொழிகளில் இத்திரைப்படம் உருவாகவுள்ளது.

மிக கவனமாக, இந்திய அளவில் பிரபலமான, தேர்ந்த நடிப்பு திறமைசாலிகள் இப்படத்தில் நடிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தேசிய விருது வென்ற நடிகை ப்ரியாமணி படத்தின் முன்னனி கதாப்பாத்திரத்தை ஏற்கிறார். இவருடன் ‘இசை ப்ரியா’ புகழ் தன்யா ரஃபியா, ‘ரெட் ரெய்ன்’ புகழ் விஷ்ணு வாரியர், Zee ஜி புகழ் அக்‌ஷயா, ஆகிய இளமையான திறமைசாலிகள் இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

தனது திரைமொழியால் புகழ் பெற்ற, தமிழின் மிகச் சிறந்த இயக்குநரான  பாலா அவர்களிடம் திரைக்கலையை பயின்ற இயக்குநர் விவேக், இந்த திரில்லர் படத்தினை இயக்குகிறார். இயக்குநர் விவேக் மிக நேர்த்தியாக, புத்தம் புதிய அணுகுமுறையில், இக்கதையினை  செதுக்கியுள்ளார்.

மேலும், படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள பிரபல பாலிவுட் நடிகர்களின் விவரங்களை, தயாரிப்பு மற்றும் இயக்குநர் குழு சமூக வளைதள பக்கங்கள் வழியே, ரசிகர்களுக்கு பட முன்னோட்டமாக ஒவ்வொன்றாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தின் ரசிகர்கள் அறியாத கதையல்ல.. அவர்கள் தினமும் கேள்விப்பட்டதுதான். பார்த்ததுதான். நாட்டில் நடந்த, தினசரிகளில் நாம் படித்த சம்பவங்களின் பின்னணியில்.. நமது சமூகத்தில் மறைந்திருக்கும் அதிகாரமிக்க சக்திகள் அரசையும், மக்களையும் எப்படி மறைவில் இயக்குகின்றன என்பதைப் பற்றித்தான் இப்படம் பேசுகிறது.

உண்மையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில், உண்மையான மனிதர்களின் விவரங்களோடு, ஒரு தொழில் முறை  கொலைகாரனை, ஹிட்மேனை  பற்றிய திரில்லராக,  இரவுகளில் உறங்கவிடாத திரில் அனுபவமாக இப்படம் உருவாகிறது.

படத்தின் தகவல்கள், போஸ்டர்கள்  போன்றவற்றை செப்டம்பர் 7-ம் தேதி துவங்கி, அடுத்த ஒரு மாதத்தில் ஒவ்வொன்றாக சமூக வலைத்தளம் மூலம் பிரபலங்களின் வழியே வெளியிடவுள்ளனர்.

மயிர்க் கூச்செரியும் திரில்லர் அனுபவமான இப்படம்  இந்தியா முழுவதுமாக மும்பை, தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Our Score