திரைப்படங்களின் வெளியீட்டுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்திருக்கும் நிபந்தனைகள்..!!!

திரைப்படங்களின் வெளியீட்டுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்திருக்கும் நிபந்தனைகள்..!!!

கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரைப்படத் தொழிலே முடங்கிப் போய் உள்ளது.

இந்தச் சூழலிலும் சில திரைப்படங்களை தியேட்டர்களுக்குக் கொண்டு வராமல் ஓடிடி தளங்களில் சில தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இதனால் தியேட்டர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில் இந்தியா முழுவதும் கொஞ்சம், கொஞ்சமாக லாக் டவுன் உத்தரவுகள் தளர்த்தப்பட்டு இப்போது கடைசியாக மால் தியேட்டர்கள், தனி திரையரங்குகள் மட்டுமே திறக்கப்படாமல் உள்ளது. இவற்றைத் திறப்பது குறித்து மத்திய அரசு இன்றைக்கு சில முக்கிய திரைப்பட அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இந்த நிலையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் சமீபத்தில் தமிழகத்தில் துவக்கப்பட்டுள்ள தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் தாங்கள் முன் வைக்கும் சில கோரிக்கைகளை தியேட்டர் அதிபர்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே தங்களுடைய படங்களை வெளியிடுவோம் என்று திடீர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து அந்தச் சங்கத்தின் தலைவரான இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டுள்ள கடிதம் இது :

தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் முன் வைத்துள்ள கோரிக்கைகள் :