‘தாதா-87’, ‘பிட்ரூ’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விஜய்ஸ்ரீஜி, தற்போது புதிதாக இயக்கி வரும் திரைப்படம் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்(pubg)’.
இந்தப் படத்தில் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடிக்கிறார். இவருடன் சேர்த்து மேலும் 5 கதாநாயகிகள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
படத்தில் இடம் பெறும் ‘பப்ஜி’ங்குற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார். மற்றும் ஜூலி, தாதா கதிர் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குநர் விஜய்ஸ்ரீஜி பேசும்போது, “இதுவொரு காமெடி கலந்த திரில்லர் படம். ‘பப்ஜி கேம்’ மாதிரியான ஒரு விளையாட்டை ஐந்து பேர் விளையாடுகிறார்கள். ஜெயித்தவர்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது. அந்தப் பரிசு என்ன என்பதும், அந்தப் பரிசினால் நடக்கும் சம்பவங்களும்தான் படத்தின் கதை…” என்றார்.
இவர் தற்போது நடிகர் அம்சவர்த்தனை வைத்து ‘பீட்ரு’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனுடன் கூடவே இந்த ‘பப்ஜி’ படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.