நாளை கூடவுள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவில் தங்களது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள கேயார் தலைமையிலான குழு ரொம்பவே மெனக்கெட்டு வருகிறது.
உடன் இருந்து இப்போது விலகிவிட்ட துரோகிகள் ஏதாவது உள்ளடி வேலை செய்துவிட்டால் என்ன செய்வது என்கிற அச்சம்தான் இப்போது கேயார் அணியைப் பிடித்து ஆட்டிவைக்கிறது..
“எங்களது அணியில் நின்று ஜெயித்த இவர்கள், இப்போது அரசியல்வாதிகள்போல் அணி மாறி நிற்கலாமா..? இந்தத் துரோகத்தை எங்களுக்கு வாக்களித்த உறுப்பினர்களால் தாங்கிக் கொள்ள முடியுமா..?” என்றெல்லாம் கேயார் தரப்பு நேற்று நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் குமுறித் தீர்த்திருக்கிறார்கள்.
கேயார் தரப்பு தங்களது கடைசி ஆயுதமாக சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள் கடிதத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
அது நமது வாசகர்களுக்காக இங்கே :