நேற்றுதான் சந்தானம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ பிரஸ் மீட்டில் அப்படியொரு பீலிங்கை கொட்டினார்.. “நான் நன்றாக இருக்க வேண்டும் என்று என்னை விரும்புபவர்களைத்தான் என் பக்கத்தில் வைப்பேன். வைத்திருக்கிறேன்.. நிகழ்ச்சிகளுக்கு அழைப்பேன்” என்று..! இதை அப்படியே தயாரிப்பாளர்களிடத்திலும் காட்டினால் நன்றாக இருக்குமே..?
சென்ற வருடம் ஏப்ரல் 16-ம் தேதி மாலை கிரீன் பார்க் ஹோட்டலில் ரூம் போட்டு தமிழக கவர்னரை அழைத்து பூஜை நடத்தி துவக்கினார்கள் ‘நாரதன்’ என்ற படத்தை.
புதுமுக தயாரிப்பாளரின் தயாரிப்பில் நாகா வெங்கடேஷ் இயக்கும் படம் இது. நகுல்தான் ஹீரோ. இதில் காமெடி கேரக்டரில் சந்தானம் நடிக்க ஒப்புக் கொண்டு அப்போதே அட்வான்ஸும் வாங்கிவிட்டார்.
2 ஷெட்யூஸ் ஷூட்டிங்கையும் நடத்தி முடித்துவிட்டு சந்தானத்தின் கால்ஷீட்டுக்காக கடந்த ஒரு வருடமாகக் காத்திருந்தது படக் குழு. அந்தா.. இந்தா என்று இழுத்தடித்தவர் இப்போது “நான் இதுல நடிக்க முடியாது. எனக்கு இப்போ நேரமில்லை…” என்று சொல்லி அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துவிட்டாராம் சந்தானம்.
அதிர்ந்து போன தயாரிப்பாளர் தரப்பு நீண்ட ஆலோசனைக்கு பின்பு வேறு வழியில்லாமல் உடனடியாக பிரேம்ஜியை அந்த கேரக்டருக்கு புக் செய்து ஷூட்டிங்கை இன்றைக்குத்தான் மறுபடியும் துவக்கியிருக்கிறார்களாம்..
‘முன்பேயே சொல்லியிருந்தால் இத்தனை நாட்கள் காத்திருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே?’ என்கிறது நாரதன் படக் குழு..!
‘இதுகூட செய்யலைன்னா என்னைய கோடம்பாக்கத்துல ஒரு பெரிய நடிகன்னு ஒத்துக்கவே மாட்டாங்களே?’ என்கிறது சந்தானம் தரப்பு..!
நல்லா காட்டுறாங்கய்யா நல்லவங்க குணத்தை..!