இன்றைய ஹாட் நியூஸ் இதுதான்..!
வருங்கால பிரதமரான நரேந்திர மோடி உள்ளிட்ட பெரும் தலைவர்களும், சாதா தலைவர்களுமாக உழப்பிக் கொண்டிருந்த டிவிட்டர் உலகத்தை கலக்கியெடுக்க களம் புகுந்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
ஏற்கெனவே அமிதாப்பச்சன், ஷாரூக்கான் என்று வடக்கத்திய பிரபலங்கள் தங்களது தினசரி நடவடிக்கைகளை டிவிட்டரில் தட்டிவிட்டு எப்போதும் தங்களைப் பற்றிய நினைவுகளுடனேயே ரசிகர்கள் இருந்தாக வேண்டும் என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
இப்போது இதுவரையில் இணையவெளித் தளங்கள் எதிலும் தலை காட்டாமல் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, இன்றைக்கு திடீரென்று இதில் களம் கண்டிருப்பதற்கு எதற்கா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக இங்கே அவரால் தொடர்ந்து ட்வீட் செய்ய முடியாது என்பது உண்மை..
அப்படியிருந்தாலும் ரசிகர்களுடன் இங்கேயாவது தொடர்பில் இருக்கிறாரே என்கிற சில்லரை திருப்தியுடன் அவரது ரசிகர்கள் திருப்திப்பட்டுக் கொள்ள ஒரு வாய்ப்பு கொடுத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படலாம்.
சூப்பர் ஸ்டாரின் முதல் ட்வீட் இதுதான் :
“Salutation to the Lord. Vaṇakkam aṉaivarukkum !! A big thank you to all my fans. Excited on this digital journey…”
ரஜினியின் ட்வீட்டர் முகவரி இது : https://twitter.com/
இணைந்த சில நிமிடங்களில் குவியத் துவங்கிய ரசிகர்கள் பட்டாளத்தின் எண்ணிக்கை இந்த ஒரு மணி நேரத்தில் 50000-ஐ தாண்டிவிட்டது.. எப்படியோ இதையும் பரபரப்புக்காகவும், படத்தின் பப்ளிசிட்டிக்காகவும் பயன்படுத்தாமல்.. அமிதாப் போல, ஷாரூக்கான்போல அவரைப் பற்றிய செய்திகள்.. நாட்டு நலன் பற்றிய அவரது கருத்துக்களை வெளியிடும் தளமாகப் பயன்படுத்திக் கொண்டால் அவருக்குத்தான் பெருமை..
சரி.. ரஜினி ட்வீட்டருக்கு வந்தாச்சு.. உலக நாயகன் கமல்ஹாசன் எப்போ வருவார்..?