பிரசன்னா நடிக்கும் ‘திரவம்’ வெப் சீரிஸ்

பிரசன்னா நடிக்கும் ‘திரவம்’ வெப் சீரிஸ்

ஆட்டோ ஷங்கர் வெப் சீரிஸைத் தொடர்ந்து, திரவம் எனும் வெப் சீரிஸை வெளியிட்டுள்ளனர் Zee5. பிரசன்னா, இந்துஜா, ஜான் விஜய், அழகம்பெருமாள், அபிஷேக், காளி வெங்கட், ஸ்வயம் சித்தா, பிரதீப் ஆகியோர் நடிக்க, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

ரவி பிரகாசம் என்பவர் மூலிகை பெட்ரோலைக் கண்டுபிடிக்கிறார். விஞ்ஞானி எனப் புகழ்படுபவர், பின் ஏமாற்றுக்காரர் என முத்திரை குத்தப்படுகிறார். அவரை உலகளவில் பல்வேறு குழுக்கள் துரத்தத் தொடங்கிறது. ஒடி, ஒளிந்து கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார். எப்படி அவர் அனைத்தையும் மீறி நிரூபிக்கிறார் என்பது தான் திரவம் வெப் சீரிஸின் கதை.

திரவம் பற்றிப் பேசிய அரவிந்த் கிருஷ்ணா, “பிரசன்னாவுடன் படம் செய்யணும்னு ஆசை. முன்பே பேசினோம். இந்த ஐடியா சொன்னதும், வெயிட் கூட்டி, க்ரே முடியுடன் வேணும்னு சொன்னதும், அப்படி வந்து நின்னார். மேயாத மானில் நடித்த இந்துஜா ரொம்ப டேலன்ட்டான நடிகை. இது ஒரு புது முயற்சி எனக் கேட்டதும், அவங்களும் உடனே நடிக்கச் சம்மதிச்சாங்க. வெப் சீரிஸ்ங்கிறது, டிவி சீரியல் இல்லை. இது ஒரு புது மீடியம். நிறைய புது விஷயங்கள் பண்ணலாம். இனி இதுதான் எதித்காலம். வீட்டிற்கு ஹோம் தியேட்டர் வந்தாச்சு, மொபைலும் அனைவர் கையிலும் வந்தாச்சு. இன்னும் 4-5 வருடங்களில், திரையரங்கிற்குச் சென்று படம் பார்ப்பவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் ர்ன்று தெரியவில்லை. வெயிட் செய்து, வீட்டிலேயே பார்க்கலாம் என குடும்பத்தோடு அமர்ந்து, வீட்டிலேயே பாப்கார்ன் செய்து பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆக, டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்க்கு நகரவேண்டிய காலம் வந்துடுச்சு. இந்தக் கதை உருவாக முதுகெலும்பாக இருந்தவர் யூகி சேது” என்றார் திரவம் வெப் சீரிஸின் இயக்குநர் அரவிந்த் கிருஷ்ணா.

“சினிமாவின் இன்னொரு நீட்சி வெப் சீரிஸ். நான் நடிக்க ஆசைப்பட்டு வந்தேன். எனக்கு சினிமா, விளம்பரம், வெப் சீரிஸ் எல்லாம் ஒன்றுதான். பிடிச்சு நடிக்கணும். மூலிகை பெட்ரோல் என்றதுமே ஒருவர் பெயர் ஞாபகம் வரும். ஆனா இது அவரைப் பற்றிய படமில்லை. அப்படியொன்று கண்டுபிடிக்கப்பட்டால், ஒருவருக்கு உண்மையில் என்னெவெல்லாம் நேரக் கூடிய வாய்ப்பிருக்கோ, அதைக் கற்பனையா சொல்லியிருக்கார் அரவிந்த் கிருஷ்ணா. இந்த வாய்ப்பை அவர் என்னைக் நம்பி கொடுத்ததற்கு அவருக்கு நன்றி. இந்தக் கதாபாத்திரம் செய்வது மிகவும் சேலஞ்சிங்காக இருந்தது. அந்த சேலஞ்ச் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது” என்றார் பிரசன்னா.

Our Score