full screen background image

பிரசன்னா, தான்யா பாலகிருஷ்ணா நடிக்கும் காமெடி வெப் சீரீஸ்..!

பிரசன்னா, தான்யா பாலகிருஷ்ணா நடிக்கும் காமெடி வெப் சீரீஸ்..!

Trend Loud India Digital  மற்றும்  இயக்குநர், தயாரிப்பாளரான பாலாஜி மோகனின்  Open Window ஆகிய நிறுவனங்கள் இணைந்து தங்களது  இரண்டாவது படைப்பாக புதிய தமிழ் இணையத் தொடரைத் தயாரிக்கின்றன.

அசத்தலான காமெடி டிராமா இணைய தொடராக உருவாகும் இத்தொடரில் பிரசன்னா, S.P.B.சரண், தன்யா பாலகிருஷ்ணா, கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – சிவா G.R.N., இசை – பரத் சங்கர், படத் தொகுப்பு – ஜூலியன், கலை இயக்கம் – ்ரீராமன்.E, உடைகள் வடிவமைப்பு – திப்தி தேசாய், விளம்பர வடிவமைப்பு – சிவகுமார்.S, இணை தயாரிப்பு – விக்டர் பிரபாகரன்.M, கிரியேட்டிவ் புரடக்சன் குழு – நிவேதா பாஸ்கரன், தன்யா பாலகிருஷ்ணா, தயாரிப்பு மேலாளர் – M.V.ரமேஷ், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா.

கிரியேட்டிவ்  புரொடியூசராக பாலாஜி மோகன் பணியாற்ற, ராஜா ராமமூர்த்தி  இத்தொடரை தயாரிக்கிறார். சஞ்சய் சுபாஷ் & வித்யா சுகுமாரன் இணை தயாரிப்பு செய்கின்றனர்.

இந்தத் தொடரை இயக்குநர் பாலாஜி மோகனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த, அறிமுக இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார் எழுதி, இயக்குகிறார்.

சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இத்தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  2022 பிப்ரவரி மாதம் இத்தொடரின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது.

Our Score