ப்ரஜின் நாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது..!

ப்ரஜின் நாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது..!

ப்ரஜின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடந்தது.

இப்படத்தை மாபின்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சாலமன் சைமன் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் ப்ரஜின் நாயகனாகவும், குஹாசினி நாயகியாகவும்  நடிக்கவுள்ளார்கள். இவர்களுடன் வனிதா விஜயகுமார், தயாரிப்பாளர் கே.ராஜன், கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத், முத்துராமன், பாவனா, சிவான்யா  ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் ஒளிப்பதிவினை ‘விசுவாசம்’ படத்தில் பணியாற்றிய ஜிஜுவும்,  கலை இயக்கத்தை உடன்பிறப்பே’ படத்தில் பணியாற்றிய முஜிபுரும் செய்கிறார்கள்.

இந்தப் பெயரிடப்படாத புதிய படத்தை ‘பொதுநலன் கருதி’ படத்தை இயக்கிய இயக்குநர் சீயோன் இயக்குகிறார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் சீயோன் பேசும்போது, “இப்படித்தான் வாழ வேண்டும் என்றிருக்கும் ஒருவனுக்கும், எப்படியும் வாழலாம் என்று இருக்கும் இன்னொருவனுக்கும் என இரு துருவ குணச்சித்திரங்களுக்கும் இடையில் சுழலும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை.

இப்படம் அரசியல், நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். நாட்டின் நடப்பு அரசியலைத்  தோலுரித்துக் காட்டும் காட்சிகள் பரபரப்பாக இருக்கும்…” என்கிறார் இயக்குநர் சீயோன்.

Our Score