சமுத்திரக்கனியின் மகன் ஹரி விக்னேஷ்வரன் இயக்கி நடித்த ‘அறியா திசைகள்’

சமுத்திரக்கனியின் மகன் ஹரி விக்னேஷ்வரன் இயக்கி நடித்த ‘அறியா திசைகள்’

பிரபல நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனியின் மகன் ஹரி விக்னேஷ்வரன் அறியா திசைகள்’ என்னும் 40 நிமிட குறும் படத்திற்கு கதை எழுதி, இயக்கி அதில் முக்கியக் கதாபாத்திரத்தில் தானே நடித்துள்ளார்.

வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் ஒருவன், எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்பதை இந்தக் குறும் படத்தில் நிஜவுலகத்தில் நிகழும் சம்பவங்களாகச் சொல்லி இருக்கிறார் இளம் இயக்குநரான ஹரி விக்னேஷ்வரன்.

மிகவும் புத்திசாலித்தனமான கதைக் களத்தில் கதையை நகர்த்தும் வசீகரமான வசனங்களுடன் சிறப்பான நடிப்பு மற்றும் அழுத்தமான இயக்கத்தில் இந்தக் குறும் படம் உருவாகியுள்ளது.

இந்த ‘அறியா திசைகள்’ குறும் படம் தற்போது இணையத்தில் வெளியாகி பலரின் பாராட்டுகளைப் பெற்றதுடன் சமூக வலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.

“புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்கிற கூற்றுக்கு உதாரணமாக சமுத்திரக்கனியின் வீட்டில் இருந்து அடுத்த படைப்பாளியும் உருவாகிவிட்டார் என்பதற்கு இந்தக் குறும் படமே சாட்சி…” என்கிறார்கள் படம் பார்த்த ரசிகர்கள்..!

Our Score