‘மைனா’, ‘கும்கி’, ‘கயல்’ என்று ஏறுவரிசையில் ஏறுகட்டி சென்று கொண்டிருக்கும் இயக்குநர் பிரபு சாலமன் அடுத்து இயக்கும் படத்தின் ஹீரோ தனுஷ். தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன்.
இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஹீரோயினாக ஒரு புதுமுகத்தையே அறிமுகப்படுத்த எண்ணியிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.
ஆகவே, இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க 18-ல் இருந்து 22-வயதுக்குள் இருக்கும் ஒரு அழகான இளம் பெண் தேவை என்று விளம்பரமே செய்திருக்கிறார்கள்.
ஆர்வமும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட விளம்பரத்தில் இருக்கும் ஈ-மெயில் முகவரிக்கு புகைப்படத்துடன் அஞ்சல் செய்து இடத்தைப் பிடியுங்கள்.
போட்டியிடும் தங்கத் தாரகைகளே.. இந்த செய்தியைப் படித்த பின்பு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றீர்களேயானால், நமது இணையத்தளத்தை பின்னாட்களில் மறந்துவிடாமல் நினைவில் வைத்திருங்கள்..!
நன்றி..!