full screen background image

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா-தமன்னா நடிக்கும் புதிய படம்..!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா-தமன்னா நடிக்கும் புதிய படம்..!

பிரபுதேவா ஸ்டுடியோஸ் மற்றும் பாப்கார்ன் எண்டெர்டைன்மெண்ட் வழங்கும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய  மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் பிரம்மாண்டமான புதிய படத்தில் பிரபுதேவா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.

தமிழ்த் திரையுலகின் திறமைமிக்க பிரபலங்கள் எல்லைக்கு அப்பாற்பட்டு, மொழிக்கு அப்பாற்பட்டு சென்று தங்களது வெற்றிக் கொடியை  நாட்டுவது உண்டு. அந்த வகையில் நடன இயக்குனர், நடிகர், இயக்குநர் என்று எல்லா வகையிலும் தேசமெங்கும் கொடி கட்டி பறக்கும் பிரபு தேவா என்றென்றும் தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்ப்பவர்.

தனக்குப் பிடித்த, பொருந்திய வேடங்கள்  கிடைத்தால் மட்டுமே நடிக்கும் பிரபு தேவா, இப்போது இன்னமும் பெயரிடப்படாத புதிய படமொன்றில் இயக்குநர் ஏ.எல். விஜய்  இயக்கத்தில் தமன்னா உடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

‘கிரீடம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’ உள்ளிட்ட படங்களை தமிழில் இயக்கிய இயக்குநர் விஜய்க்கு இதுவே முதல் ஹிந்தி படமாகும். இவரது படங்கள் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதால் கூடுதல் கவனம் ஈர்க்கிறது. பெயரிடப்படாத இந்தப் படத்தில் பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் முக்கிய வேடத்தில் நடிக்க  உள்ளார்.

ஷாரூக்கானின்  ‘ஹாப்பி நியூ இயர்’ திரைப்படம் மூலம்  தேசிய அளவில் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற பெயரை ஈட்டிய  ஒளிப்பதிவாளர் மனுஷ்நந்தன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

பிரபுதேவா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் முனைவர்  கே.கணேஷ்  மற்றும் மும்பையை சேர்ந்த பாப்கார்ன்  எண்ட்யர்டைன்மெண்ட்  நிறுவனம் இணைந்து  தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

மற்ற நடிக நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 

Our Score