full screen background image

‘இது நம்ம ஆளு’ ஆடியோ உரிமை ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாயாம்..!

‘இது நம்ம ஆளு’ ஆடியோ உரிமை ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாயாம்..!

டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில்  சிலம்பரசன், நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி ஆகியோர் நடித்திருக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின்  பாடல் ஒலி நாடா உரிமை ஒரு  கோடியே ஐம்பது லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படத்திற்கு டி,ராஜேந்தரின் இளைய மகனும் சிலம்பரசனின் சகோதரருமான குறளரசன் இசையமைத்துள்ளார். முதல் படத்திலேயே இவ்வளவு அதிக விலைக்கு பாடல் ஒலி நாடா விற்பது இதுவே முதல் முறை. தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும்  சேர்த்து உரிமைத் தொகை ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியிருக்கிறது.

இந்த ஒலி நாடா உரிமையை ‘லகரி’ இசை நிறுவனம் வாங்கியுள்ளனது. ‘லகரி’ நிறுவனம் ஏ,ஆர்,ரஹ்மானின் முதல் படமான ‘ரோஜா’ படத்தின்  ஒலி நாடா உரிமையை வாங்கினர். இன்று ஏ.ஆர்.ரஹ்மான் புகழின் உச்சியில் உள்ளார். மேலும், ‘I am a little Star.. நான் ஒரு சூப்பர் ஸ்டார் ஆவேன்..’ என்று நடிகர் சிம்பு சிறு வயதில் முதல்முறையாக பாடி நடித்த டி,ராஜேந்தரின் ‘சம்சார சங்கீதம்’, சூப்பர் ஸ்டாரின்  ‘தளபதி’, சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி கண்ட ராஜமவுலியின் ‘பாகுபலி’,  தற்போது திரையில் ஓடிக் கொண்டிருக்கும் மாதவன் நடித்த ‘இறுதி சுற்று’ போன்ற நூற்றுக்கணக்கான  வெற்றிப் படங்களின் ஒலி நாடா உரிமையை இதே ‘லகரி’ நிறுவனம்தான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

‘இது நம்ம ஆளு’ படத்தின்  பாடல்கள், நடிகர் சிலம்பரசனின்  பிறந்த தினமான பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகவுள்ளது.

Our Score