full screen background image

கரோனா நெருக்கடியில் வெளியாகியிருக்கும் நம்பிக்கையூட்டும் பாடல் ’போட்டும் போகட்டுமே’

கரோனா நெருக்கடியில் வெளியாகியிருக்கும் நம்பிக்கையூட்டும் பாடல் ’போட்டும் போகட்டுமே’

கொரோனா தலை விரித்தாடும் இந்த நேரத்தில் தினந்தோறும் இந்த நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் 300-ஐ தாண்டி போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தச் சோக நிகழ்வில் இருந்து மக்கள் எழுந்து வரவும், இதைத் தாண்டிச் செல்லவும் நம்பிக்கையூட்டும்விதத்தில் ஒரு வீடியோ பாடல் உருவாகியுள்ளது.

போட்டும் போகட்டுமே’ என்று தலைப்பிட்டுள்ள வீடியோ பாடலில் நடிகர் அர்ஜூன் தாஸும், நடிகை லாவண்யா திரிபாதியும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பிரிட்டோ, படத் தொகுப்பு – ஆகாஷ், இசை – ஜென், சத்யா,  காட்சி இயக்கம் – அசோக் மாஸ்டர், ஆடை வடிவமைப்பு –  ஸ்ருதி, VFX – Real Works Studios, இயக்கம் – லோகி.

இந்த வீடியோ பாடல் பற்றி நாயகன் அர்ஜூன் தாஸ் பேசும்போது, “இந்த ’போட்டும் போகட்டுமே’, பாடல் அன்பு, நம்பிக்கை, மன உறுதி, வலிமையை வலியுறுத்துகிறது. உண்மையான அன்பு எல்லாவற்றையும் வெல்லும்.

இதை உருவாக்குவதன் பின்னணியில் நிறைய பேரின் கடினமான உழைப்பு இருக்கிறது. இந்த கடினமான நேரத்தில் இந்த வீடியோ உங்கள் ஆன்மாவிலிருந்து நிம்மதியைக் கொணர்ந்து முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வரச் செய்யும். இந்த கடினமான காலகட்டத்தைக் கடக்க அதீத அன்பை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்…” என்றார்.

படத்தில் நடித்திருக்கும் நடிகை லாவண்யா திரிபாதி பேசும்போது, “நாம் இந்தக் கொரோனா காலத்தில் தைரியமாக இருக்க வேண்டும். இந்தப் ’போட்டும் போகட்டும்’ பாடலும் அதைத்தான் வலியுறுத்துகிறது. அன்பானவர்களை இழப்பது மிகப் பெரிய துயரம். ஆனாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது. இதுவும் கடந்து போகும் என்ற எண்ணம் நமக்குள் வேண்டும்…” என்றார்.

Our Score