அர்ஜூன் படத்தில் பாலிவுட் பெண் டான்ஸ் மாஸ்டர்கள் அறிமுகம்

அர்ஜூன் படத்தில் பாலிவுட் பெண் டான்ஸ் மாஸ்டர்கள் அறிமுகம்

பூனம் ஷா, பிரியங்கா ஷா என்கிற இரட்டை பெண் நடன இயக்குனர்களை பாலிவுட்டில் இருந்து கோடம்பாக்கத்திற்கு களமிறக்கியிருக்கிறது ‘காதலின் பொன் வீதியில்’ படக் குழு.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஆக்சன் கிங் அர்ஜுன் ‘காதலின் பொன் வீதியில்’ படத்தைத் தனது ஸ்ரீராம் பிலிம் இண்டர்நெஷனல் சார்பில் தயாரித்து, அவரே கதை திரைக்கதை வசனமும் எழுதி இயக்கியும் வருகிறார்.

இந்தப் படத்தில் ஒரு இளமை துடுக்கான வேடத்தில் அர்ஜூனின் மகளான ஜஸ்வர்யா அர்ஜுனே நடிக்கிறார்.  நடிப்பு கலையை முறையே பயின்ற சந்தன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

மேலும், இவர்களுடன் இயக்குநர் கே.விஸ்வநாத், நடிகை சுஹாசினி, ‘மொட்டை’ ராஜேந்திரன், மனோபாலா, சதிஷ், யோகி பாபு, ப்ளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – H.C.வேணு கோபால், இசை – ஜெஸ்ஸி கிப்ட், படத்தொகுப்பு – கே கே., கலை இயக்கம் – சசிதரர், சண்டை பயிற்சி – “Kick Ass” காளி, மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு மேற்பார்வை – கே.கவிசேகர், இணை தயாரிப்பு – பாலாஜி, கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் – அர்ஜுன், தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீராம் பிலிம் இண்டர்நெஷனல்.

இப்படத்தின் புது வரவாக ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும் கலக்கிய இளம் இரட்டை நடன இயக்குநர்களான பூனம் ஷா, பிரியங்கா ஷா இருவரும் இளமை ததும்பும் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கவுள்ளனர்.

பாரம்பரிய பரத நாட்டிய நடனத்துடன் மேற்கித்திய நடனத்தை உட்புகுத்தி புதிய நடன அசைவுகளை உருவாக்கியதில் வித்தகர்களான இவர்கள் ரம்தா யோகி – தால் டான்ஸ் பரத நாட்டியம் ஃப்யுசன் – விஜிஒ கர்நாடிக் டிராப் உள்ளிட்ட இசை, பாடல்களுக்கு நடனம் அமைத்து பல ரசகர்களின் பாராட்டை பெற்றுள்ளனர்.

பூனம் ஷா, பிரியங்கா ஷா ஆகியோரின் புதிய நடன அசைவுகள் பார்த்து பிரமித்துப்போன ஜஸ்வர்யா அர்ஜுன் இவர்களை தான் நடிக்கும் படத்தில் இடம்பெரும் ஒரு முக்கிய பாடலுக்கு நடன இயக்குநர்களாக பணியாற்ற வேண்டுமென தன் தந்தை அர்ஜுனிடம் வேண்டுகோள் வைத்தார்.

பூனம் ஷா, பிரியங்கா ஷா ஆகியோரின் இசை நடன விடியோக்களை பார்த்து அவர்களது நடன திறமையை ரசித்து தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார் அர்ஜுன்.  தந்தையின் சம்மதத்தை பெற்றதும் இளம் நடன இயக்குநர்களை தொடர்பு கொண்டு தற்போது நடிக்கும் படத்தின் கதையையும் பாடல் இடம் பெறும் சூழ்நிலையையும் விளக்கியுள்ளார் ஜஸ்வர்யா அர்ஜுன்.

அது பிடித்துப்போன பூனம் ஷா, பிரியங்கா ஷா இருவரும் மும்பைக்கு பறந்து வந்து பாடலுக்கான நடனத்தை அமைத்து கொடுத்துள்ளனர். மும்பையில் பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்ட இப்பாடலிற்கு ஜஸ்வர்யா அர்ஜுன் மிகவும் சிறந்த முறையில் நடனமாடியதாகவும், அனைத்து நடன அசைவுகளையும் மிகவும் எளிதாக கற்றுக் கொண்டார் என்றும் பூனம் ஷா, பிரியங்கா ஷா தெரிவித்தனர்.

Our Score