‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..!

‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..!

Y.S.R.Films மற்றும் K Productions சார்பில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, எஸ்.என்.ராஜராஜன், இர்பான் மாலிக் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘பியார் பிரேமா காதல்.’

காதல் சார்ந்த படங்களுக்கு இளமை ததும்பும் நாயகன், நாயகி, இளமையான சிந்தனைகள் உடைய ஒரு இளம் இயக்குநர் ஆகியோருடன் காதல் படங்களுக்கு பிரத்யேகமாக இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் அமைந்துவிட்டால், அந்தப் படத்துக்கு ‘பியார் பிரேமா காதல்’ என்ற காதல் மொழி அந்தஸ்து கிடைத்து விடும்.

அதிலும் யுவன் ஷங்கர் ராஜாவே அந்தப் படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்துவிட்டால் அந்த படத்துக்கு இளைய சமுதாயம் கொடுக்கும் அங்கீகாரம் நூறு மடங்காக இருக்கும் என்பதில் ஐயமில்லையே. அப்படித்தான் இந்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.

படம் பற்றி தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா பேசும்போது, “இயக்குநர் இலன் என்னிடம் இந்தப் படத்தின் கதையைச் சொல்லும்போதே இந்த கதையின் இலக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் என்பதையும், ஒரு இசை அமைப்பாளராக என் பங்களிப்பை வழங்க பெரும் வாய்ப்பு இப்படத்தில் இருப்பதையும் நான் கணித்து கொண்டேன்.

ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தின் இயக்குநர் உட்பட அனைத்து கலைஞர்களின் உழைப்பை கண்டு பிரமித்து போனேன். ஹரிஷ் கல்யாண் இந்த படத்துக்கு பிறகு மிக பெரிய அந்தஸ்துக்கு உயர்வார். ரைசா வில்சன் ரசிகர்களை நிச்சயம் கவர்வார்.

இவர்களுக்குள் இருக்கும் ‘chemistry’தான் ‘high on love’  பாடல் இணையத் தளத்தில் வெளியாகி மிகக் குறுகிய காலத்தில் 84 லட்சம் பார்வையாளர்களை வெற்றி பெற காரணம் என்றால் மிகை இல்லை.

பாடல் காட்சிகளுக்காக இதுவரையிலும் படப்பிடிப்பே நடந்திராத இடத்துக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் சோவியத் ரஷ்யாவின் கூட்டமைப்பில் முன்பிருந்த அஜர்பைஜான் என்ற நாட்டுக்கு சென்றோம். காதலுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கினால் அது அஜர்பைஜான்தான். காதல் தேசம் என்றே அந்த நாட்டை அழைக்கலாம். அத்தனை அழகு.

ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு காதல் படம் வரும். வந்து வெற்றி பெறும் என்பார்கள். இந்த யுகத்துக்கு ‘பியார் பிரேமா காதல்’ என்று நான் உறுதியாக கூறுவேன்…” என்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

Our Score