full screen background image

‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…!

‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…!

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது, தனது ஆர்வத்தால் ஒரு பாடலாசிரியராக மாறி, நடிகராக உருவாக்கிய அதே தாக்கத்தை கொடுத்திருக்கிறார்.

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படத்தில்தான் நடிகர் சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக  அறிமுகமாகியுள்ளார். அவர் எழுதியுள்ள ‘கல்யாண வயசு’ என்ற பாடலுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். 

சிவகார்த்திகேயன், அனிருத், நடன இயக்குநர் சதீஷ் மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோர் பங்கு பெற்ற வீடியோ வடிவிலான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஜெட் வேகத்தில் எகிறியிருக்கிறது.

ஏற்கெனவே பாடலாசிரியர் விவேக்கின் பாடல் வரிகளில் ஷான் ரோல்டன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரின் குரலில் வெளியான முதல் தனிப் பாடலான ‘எதுவரையோ’ பாடல், இப்போதே YouTube-ல்  மில்லியன் பார்வைகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அது தனியார் பண்பலை வானொலி நிலையங்களின் கீதமாகவும், எல்லோருடைய பிளேலிஸ்ட்களிலும் முக்கிய இடத்தை பிடித்த பாடலாக இடம் பிடித்திருக்கிறது.

இந்த நிலையில் இரண்டாவது பாடலாக வெளியாகியுள்ள சிவகார்த்திகேயனின் ‘கல்யாண வயசு’ பாடல் சிவகார்த்திகேயன் – அனிருத் இணை புதிய பரிமாணத்தை நிரூபித்து, இசை அட்டவணையில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது.

யூ டியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை இந்தப் பாடல் மிக குறுகிய காலத்தில் பிடித்திருக்கிறது என்பது இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் பெருமைதான்..!

Our Score