தனுஷின் ‘பட்டாஸ்’ திரைப்படம் நிச்சயம் வெடிக்குமாம்..!

தனுஷின் ‘பட்டாஸ்’ திரைப்படம் நிச்சயம் வெடிக்குமாம்..!

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜனின் தயாரிப்பில், நடிகர் தனுஷ் நடிக்கும் அவருடைய 39-வது படத்திற்கு ‘பட்டாஸ்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இப்படத்தை டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்க, ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.

இயக்குநர் துரை செந்தில்குமார் எழுதி இயக்கும் இந்த ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷ், மெஹ்ரீன் பிர்ஸாடா, நவீன் சந்திரா மற்றும் சினேகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவை கையாள, இந்த படத்திற்கு விவேக் – மெர்வின் இரட்டையர்கள் இசையமைக்கிறார்கள். திலீப் சுப்பராயன் (சண்டை இயக்கம்), விவேக் (பாடல்கள்), ஜானி (நடனம்), அனுவர்தன் – தாத்ஷா ஏ பிள்ளை (ஆடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.

இந்தப் படத்தின் முதல் கட்ட போஸ்டர் தனுஷின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது.

படத்தின் தயாரிப்பாளரான டி.ஜி.தியாகராஜன் தலைப்புப் பற்றிக் கூறும்போது, “இந்த மாபெரும் கொண்டாட்ட சந்தர்ப்பத்தில் நாங்கள் தயாரித்து வரும் 34-வது படத்தின் தோற்றத்தையும் தலைப்பையும் வெளியிட முடிவு செய்தபோது, தனுஷ் ரசிகர்களுக்கு இதுவொரு ஆடம்பரமான விருந்தாக வழங்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தோம்.

படத்தின் தலைப்புக்கான முதல் தோற்றம் மாஸ் மற்றும் கிளாஸ் இரண்டும் கலந்ததாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அப்படி எங்களுக்குக் கிடைத்ததுதான் இந்த ‘பட்டாஸ்’ என்னும் தலைப்பு.

pattaas-movie-poster-2

இப்போது தனுஷின் வேடிக்கையான தோற்றத்தையும், ‘பட்டாஸ்’ என்ற தலைப்புக்கு ஏற்ப வண்ணங்களின் சுறுசுறுப்பான ஃப்ளாஷ்களையும் பார்க்கும்போது, இந்த திரைப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, நிச்சயமாக அனைத்து தரப்பினருக்கும் ஒரு விருந்தாக மாறும் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம்.

தனுஷ் ஒரு சிறந்த நடிகர் மட்டும் அல்ல, அவர் தன் உடலை கச்சிதமாக வைத்திருக்கும் ஒரு நடிகர். அதனால்தான் ஃபர்ஸ்ட் லுக்கில் அவரது இளமை தோற்றம் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.

மேலும், இயக்குநர் துரை செந்தில்குமார் இந்தப் படத்திலும் அவரை மிக அழகாக காண்பித்திருக்கிறார். இதுதான் ‘பட்டாஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மிகவும் சிறப்பாக ஆக்கியுள்ளன.

எங்களது சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் எப்போதும் குடும்பம் சார்ந்த பொழுது போக்கு படங்களை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறோம். ‘பட்டாஸ்’ அதுபோலவே இருக்கும் என்று உறுதியளிக்கிறோம்..” என்றார்.

இந்த ‘பட்டாஸ்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Our Score