‘வசூல் ராஜா’வைப் போல வெற்றி பெறக் காத்திருக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’..!

‘வசூல் ராஜா’வைப் போல வெற்றி பெறக் காத்திருக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’..!

சுரபி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.மோகன் தயாரித்துள்ள திரைப்படம் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’

இந்தப் படத்தில் ஆரவ் நாயகனாக நடிக்கிறார். காவ்யா தாப்பர், நிகிஷா பட்டேல் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் நாசர், ஆதித்யா, சாம்ஸ், இவர்களுடன் ராதிகா சரத்குமாரும் பெண் தாதா போன்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – கே.வி.குகன், இசை – சைமன் கே.கிங், படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, கலை இயக்கம் – ஏ.ஆர்.மோகன், சண்டை இயக்கம் – ஹரி தினேஷ், விக்கி, பிரதீப் தினேஷ், நடன இயக்கம் – கல்யாண், தினேஷ், மக்கள் தொடர்பு – டி ஒன், சுரேஷ் சந்திரா.

இந்தப் படத்தை இயக்குநர் சரண் எழுதி, இயக்கியுள்ளார். இயக்குநர் சரண் எப்போதுமே ‘சிறந்த பொழுதுபோக்கு’ படங்களுக்காக பாராட்டப்படுகிறார். அவரது திரைப்படங்கள் காதல், ஆக்‌ஷன், நகைச்சுவை, இளைஞர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களின் ரசனைகளை பூர்த்தி செய்யும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

சமீபத்தில் வெளியான இந்த ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் டீசர் மூலம் இந்த படம் அனைவருக்கும் 100% பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் அளிக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

சரண் அவர்களின் திறமையானது சிறந்த பொழுதுபோக்கு படங்களை வழங்குவதில் மட்டும் இல்லை, அதையும் தாண்டி ஒவ்வொரு கதாபாத்திரத்தை வடிவமைப்பதிலும், சரியான கலைஞர்களை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து, அதிர்ச்சியூட்டும் தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் அவரது புத்திசாலித்தனம் அதிக அலங்காரங்களை படத்துக்கு சேர்க்கிறது.

ஆரவ்வின் கவர்ச்சிகரமான ஆளுமை, அவருக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு. இப்போது அவரது கம்பீரமான குரலை கேட்பது மேலும் ஈர்ப்பை சேர்க்கிறது. ராதிகா சரத்குமார் ஒரு தாதாவாக தோன்றுவது மற்றொரு சிறப்பம்சமாகும்.

மேலும் நாசர், காவ்யா தாப்பர், ஆதித்யா, சாம்ஸ், நிகிஷா படேல் மற்றும் பலர் உட்பட அனைவருக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்பது உறுதி.

டீசர் படம் குறித்து நல்ல எதிர்பார்ப்புகளை அளித்துள்ள நிலையில், ரோகேஷ் எழுதிய வரிகளுக்கு, சைமன் கே கிங் ஒரு புதிய பரிமாண இசை வகையில் இசையமைத்துள்ள முதல் சிங்கிள் பாடலான ‘தா தா’ பாடல் ஒரே இரவில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.’ஸின் வெற்றியை ரசித்துப் பார்த்தவர்களுக்கு அடுத்த வெற்றியை இந்த ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’.ஸின் மூலமாக வழங்க இருக்கிறார் இயக்குநர் சரண்..!

Our Score