full screen background image

“பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த மலையாள நடிகர்கள்…” – ‘பூ’ பார்வதியின் பகீர் பேச்சு..!

“பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த மலையாள நடிகர்கள்…” – ‘பூ’ பார்வதியின் பகீர் பேச்சு..!

தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத ‘பூ’ படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமான பார்வதி மேனன் பேசுவதில் எப்போதும் ஓப்பன் டைப். தான் சின்ன வயதிலேயே பாலியல் அத்துமீறலுக்கு உள்ளானதாக ஒரு முறை வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மலையாள சினிமாவுலகில் வாய்ப்பு கொடுப்பதற்காக தன்னை பலரும் படுக்கைக்கு அழைத்த்தாக இப்போது பகிரங்கமாக பேட்டியளித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “மலையாள சினிமாவின் டாப் ஹீரோக்களும், பெரிய இயக்குநர்களுமே என்னை வெளிப்படையாக படுக்கைக்கு அழைத்தனர். அவர்களது அழைப்பை நான் நிராகரித்துவிட்டேன்.

இன்னும் சிலர் பட வாய்ப்பு தருவதாகவும், அதற்கு பதிலாக அவர்களுடன் உடன்பட வேண்டும் என்றும் கேட்டனர். அது எனக்கு ஒருபோதும் பிடிக்காது என்பதால் நான் அவர்களைத் தவிர்த்துவிட்டேன்.

இதனால் எனக்கு சில காலம் மலையாள உலகில் படங்களே இல்லாமல் இருந்தேன். ஆனாலும் என்னுடைய கொள்கையில் நான் உறுதியாகவே இருந்தேன்.

என்னுடன் படங்களில் நடித்த பல நடிகர்கள் வெளிப்படையாக என்னுடைய உடல் அமைப்பை கிண்டல் செய்தனர். நான் அவர்களை பதிலுக்கு ஏசவில்லை. பொறுமையாக கேட்டுக் கொண்டேன். அவர்களை அலட்சியப்படுத்தினேன்.

தமிழ், கன்னட மொழி படங்களில்கூட நடித்தேன். ஆனால் அங்கெல்லாம்கூட எனக்கு இப்படியொரு நிலைமை ஏற்படவில்லை. யாரும் அந்தப் பக்கம் என்னை இதுபோல் ட்ரீட் செய்த்தில்லை. ஆனால் எனது சொந்த மாநிலமான கேரளா சினிமாவுலகத்தில் எனக்குக் கிடைத்த இந்த மரியாதை எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

படுக்கைக்கு அழைப்பது ஆம்பளத்தனம் என்று பல ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் பெண்களின் பலவீனத்தை தங்களது பலமாக நினைத்துக் கொள்கிறார்கள். இப்போதும் இது மலையாள சினிமாவுலகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது இங்கேயிருக்கும் அனைவருக்குமே நன்கு தெரிந்த விஷயம்…” என்று சொல்லியிருக்கிறார்.

பார்வதி மேனன் 2006-ம் ஆண்டு ‘அவுட் ஆஃப் சிலபஸ்’ என்கிற மலையாளப் படத்தின் மூலமாக அறிமுகமானார். 2008-ம் ஆண்டு தமிழ் படமான ‘பூ’ படத்தில் அறிமுகமாகி பெரும் பெயரைப் பெற்றார். இதைத் தொடர்ந்து ‘சென்னையில் ஒரு நாள்’, ‘மரியான்’, ‘உத்தமவில்லன்’, ‘பெங்களூர் நாட்கள்’, ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் புகழ் பெற்ற படங்களான ‘அவுட் ஆஃப் சிலபஸ்’, ‘நோட்புக்’, ‘பிளாஷ்’, ‘சிட்டி ஆஃப் காட்’, ‘பெங்களூர் டேய்ஸ்’, ‘என்னு நிண்டே மொய்தீன்’, ‘சார்லி’ ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் இவர்.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெரும் பெயர் பெற்றிருக்கும் ‘டேக் ஆஃப்’ என்னும் படத்திலும் பார்வதி மேனன் நடித்திருக்கிறார்.

தமிழ், கன்னடத்தில்கூட தனக்கு இந்தக் கொடுமை இல்லாமல் மலையாள திரையுலகில், அதுவும் சீனியர் நடிகர்களும், சீனியர் இயக்குநர்களும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பார்வதி மேனன் சொல்லியிருப்பது, மலையாள திரையுலகத்தில் தற்போது பரபரப்பை கூட்டியிருக்கிறது.

Our Score