full screen background image

“28 மலையாள சினிமா பிரமுகர்கள் எனக்குப் பாலியல் தொந்தரவு தந்தார்கள்” – நடிகை சார்மிளா பரபரப்புப் புகார்!

“28 மலையாள சினிமா பிரமுகர்கள் எனக்குப் பாலியல் தொந்தரவு தந்தார்கள்” – நடிகை சார்மிளா பரபரப்புப் புகார்!

ஹேமா கமிட்டி அறிக்கைக்குப் பிறகு திரையுலகத்தில் பாலியல் தொல்லையை சந்தித்த நடிகைகள் பலரும் வெளிப்படையாக தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாகச் சொல்லி வருகிறார்கள். இதில் அடுத்து வந்திருப்பது நடிகை சார்மிளா.

‘ஒயிலாட்டம்’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை சார்மிளா. அதன் பிறகு பல்வேறு தமிழ்ப் படங்களில் நாயகியாகவும் நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் மட்டுமே சுமார் 38 படங்களுக்கும் மேல் நடித்துள்ள இவர், தற்போது மலையாளப் படத்தில் நடிக்கும்போது அந்தப் படத்தின் தயாரிப்பாளரும், அவருடைய நண்பர்களும் சேர்ந்து தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறியுள்ளார்.

தமிழில் வெளிவந்த ‘காலம் மாறிப் போச்சு’ படத்தை மலையாளத்தில் கடந்த 1997-ம் ஆண்டு ‘அர்ஜுனன் பிள்ளையும் அஞ்சு மக்களும்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். அந்தப் படத்தில் நானும் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தேன்.

அந்தப் படத்தின் டாக்கி போர்ஷனெல்லாம் முடிந்து பாடல் காட்சி மட்டுமே பாக்கியிருந்த்து. அதை எடுப்பதற்காக மூணாறு வந்திருந்தோம். அங்கே ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த நேரத்தில் அந்தப் படத்தின் தயாரிப்பாளரான எம்.பி.மோகனன், தயாரிப்பு மேனேஜர் சண்முகன் மற்றும் அவர்களது நண்பர்கள் சிலர் என்னுடைய அறைக்குள் புகுந்து என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்கள்.

நான் அவர்களிடமிருந்து தப்பித்து ஓட்டல் வரவேற்பாளரிடம் புகார் கூறியும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. பின்னர் அங்கு வந்த ஒரு ஆட்டோ டிரைவர்தான் மூலமாக நான் ஹோட்டலில் இருந்து வெளியேறி லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளித்தேன். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விரைந்து வந்து அந்தத் தயாரிப்பாளரையும், அவரது நண்பர்களையும் கைது செய்தார்கள்.

இதேபோல் பிரபல மலையாளப் பட இயக்குனரான ஹரிஹரன் ‘பரிணயம்’ என்ற படத்திற்காக தன்னை அணுகியபோது படுக்கைக்கு அழைத்ததாகவும், தான் மறுத்ததால் அந்தப் படத்தில் இருந்து தான் நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

“இதுபோல் மலையாளப் படவுலகின் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என 28 பேர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக” ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் சார்மிளா.

“வேறு எந்த மொழியிலும் இதுபோன்ற மோசமான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டதில்லை. எனக்கு ஒரு மகன் இருப்பதால் போலீசில் இது குறித்து புகார் செய்ய விரும்பவில்லை” என்று கூறியுள்ளார் நடிகை சார்மிளா.

Our Score