full screen background image

காதலனுடன் ஓடிப் போகும் மனைவிகளுக்கு பாடமாக அமைகிறதாம் இந்தப் ‘பச்சைக்கிளி’ திரைப்படம்..!

காதலனுடன் ஓடிப் போகும் மனைவிகளுக்கு பாடமாக அமைகிறதாம் இந்தப் ‘பச்சைக்கிளி’ திரைப்படம்..!

தமிழ்க் கலாச்சாரத்துக்கு உரம் போடும்விதமாக ‘பச்சைக்கிளி’ என்னும்  புதிய படத்தைப் L.K. புரொடக்ஷன்ஸ் சார்பாக L.K.பாஷா தயாரிக்க, M.K.செல்வம் கதை-திரைக்கதை-வசனம் – பாடல்களை எழுதி  இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக ஜிப்ஸி ராஜ்குமாரும், நாயகியாக ஹேமாவும் இரண்டாவது நாயகனாக எல்.பாபுவும் நடித்துள்ளனர். இவர்களுடன் கோவை செந்தில், முத்துக்காளை, போண்டாமணி, சூரியகாந்த், யுவாங் சுவாங், எல்.கே.பாஷா, திருச்சி நடராஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர் 

படம் பற்றி இயக்குநர்  M.K.செல்வம் பேசும்போது, “இந்தப் ‘பச்சைக்கிளி’ படம் வீட்டை விட்டு ஓடிப் போகும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பாடமாக அமையும்.

மாற்றானின் மகுடி பேச்சில் மயங்கித் தன் கணவனைப் பிரிந்து செல்கிறார் மனைவி. ஒரு கட்டத்தில் தன்னைக் கூட்டிச் சென்றவன் மிகவும் கொடியவன் என்று புரிந்து கொண்டு அவனிடமிருந்து தப்பி  மீண்டும் தன் கணவனைக் காண வரும்போது, அவள் பலவித பிரச்சினைகளைச் சந்திக்கிறாள்.  அது என்ன என்பதுதான் படத்தின் கதை.

படத்தில் 5 பாடல்கள் இடம் பெறுகின்றன. படத்தில் வரும் பாடல் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களின் பேராதரவைப் பெறும் அளவுக்கு சிறப்பாக வந்திருக்கின்றன. இந்தப் ‘பச்சைக்கிளி’ படத்தின் படப்பிடிப்பு விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை, சிதம்பரம், ஊட்டி, ராஜபாளையம், காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக  நடைபெற்றது.

வேகமாக வளர்ந்துவரும் இப்படத்தின் இசை வெளீயீட்டு விழா மிக விரைவில் நடக்கவிருக்கிறது. ‘கூண்டுக்கிளி’, ‘வண்ணக்கிளி’, ‘அன்னக்கிளி’ வரிசையில் எங்கள் ‘பச்சைக்கிளி’யும் நிச்சயம் வெற்றி பெறும்..” என்றார்.

தொழில் நுட்பக் குழுவினர் :

கதை – திரைக்கதை – வசனம் – இயக்கம் – பாடல்கள் : MK.செல்வம்

ஒளிப்பதிவு – உதயசங்கர்

இசை – செல்வ நம்பி

எடிட்டிங் – அருண், ராம்

நடனம்: ராம் முருகேஷ்

சண்டை பயிற்சி – Revenge ரஞ்சன்

தயாரிப்பு நிர்வாகம்  – கடையம் ராஜூ

மக்கள் தொடர்பு : செல்வரகு

தயாரிப்பாளர்கள் : L.K  பாஷா, மறைமலை நகர் R.சீனிவாசன், வளையப்பட்டி ஆறுமுகத்தேவர்

Our Score