விக்ரம் பிரபு & வாணி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படம்

விக்ரம் பிரபு & வாணி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படம்

‘அசுர குரு’ படத்திற்குப் பின்னர் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய திரைப்படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இது விக்ரம் பிரபு நடிக்கும் 16-வது படமாகும்.

மகாலட்சுமி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் குமாரசுவாமி பத்திக்கொண்டா இந்தப் படத்தைப் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக, வாணி போஜன் நடிக்கிறார். வில்லனாக கன்னட  நடிகர் தனன்ஜெயா  நடிக்கிறார்.

பரியேறும் பெருமாள் படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். மூத்த இசையமைப்பாளர் மணிஷர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் இந்தப் படத்திற்கு இசையமைத்து தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தேசிய விருது பெற்ற கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத் தொகுப்பை மேற்கொள்கிறார். நிர்வாக தயாரிப்பு – ரமேஷ் நோக்கவல்லி.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் சௌத்ரி  இயக்குகிறார்.

அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.