ஒசாகா சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் ‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படம்

ஒசாகா சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் ‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படம்

சென்ற ஆண்டு தமிழில் வெளியான ‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படம் பல்வேறு விருதுகளை பெற்று மக்களின் பாராட்டு மழையில் நனைந்தது.

சமுத்திரக்கனி, மணிகண்டன், சுனைனா, நிவேதிதா சதீஷ், சாரா அர்ஜுன் உள்ளிட்ட  பல நடிகர், நடிகைகள் நடிப்பில் உருவாகியிருந்த இத்திரைப்படம் நான்கு வேறு, வேறு காதல் கதைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. 

இயக்குர் ஹலிதா சமீம் இயக்கியிருந்த இந்த திரைப்படம் வெளியானது முதல் இன்றுவரை பல்வேறு விருதுகளும் பாராட்டுகளையும் பெற்று வந்த நிலையில் இப்பொழுது மற்றுமொரு கௌரவம் இத்திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

ஜப்பான் நாட்டின் ஓசாகா நகரில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக சில்லுக் கருப்பட்டி’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 1-ம் தேதி ‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படம் திரையிடப்படுகிறது.