full screen background image

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை திரையிட பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு..!

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை திரையிட பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு..!

நடிகர் சூர்யா தயாரித்து, நடித்திருந்த ‘ஜெய் பீம்’ பட சர்ச்சையினால் அவரது அடுத்தப் படமான எதற்கும் துணிந்தவன் படத்திற்குச் சிக்கல் எழுந்துள்ளது.

‘ஜெய் பீம்’ படத்தில் வன்னியர் இன மக்களை இழிவுபடுத்தியதாகவும், இதற்காக நடிகர் சூர்யா பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூர் மாவட்டத்தில் திரையிடக் கூடாது..” என்று பாட்டாளி மக்கள் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

டிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜெய் பீம்’. இந்த திரைப்படம்  பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

இருப்பினும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் வன்னியர்களுக்கு எதிராக உள்ளது என்கிற குற்றச்சாட்டும் அப்போது முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக பா.ம.க. இளைஞரணி தலைவரான ராஜ்யசபா எம்.பி. அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் நடிகர் சூர்யாவுக்கு பல கேள்விகள் எழுப்பி இருந்தார்.

அந்த அறிக்கையில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்து இருந்தார்.

நடிகர் சூர்யாவும் அன்புமணிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “அன்புமணி குறிப்பிட்டது போல எந்தவொரு தனி நபரையும் சமுதாயத்தையும் அவமதிக்கும் நோக்கம் படக் குழுவினருக்கும் தனக்கும் இல்லை. சொல்பவர் சுட்டிக் காட்டிய தவற்றை உடனடியாக திருத்தினோம். படைப்புச் சுதந்திரம் யாரையும் இழிவுபடுத்தும் உரிமையை வழங்கவில்லை என்ற அன்புமணியின் கருத்தை ஏற்கிறேன்…” என கூறியிருந்தார்.

இருப்பினும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பா.ம.க.வினர் சூர்யாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா நடித்து வரும் 10-ம் தேதி வெளிவரவுள்ள  ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூரில் வெளியிட கூடாது என்று பா.ம.க. சார்பில் கடலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  

சூர்யா, வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காதவரை எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூர் மாவட்டத் திரையரங்குகளில் திரையிட  கூடாது என பா.ம.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Our Score