அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட Photoshoot நிகழ்வில், தமிழகத்தின் 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 ரசிகர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
சூர்யா ரசிகர்களை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, ரசிகர்களின் உற்சாகத்தால் களைகட்டியது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ரசிகர்கள் தங்களது அபிமான நடிகருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு, இந்தச் சந்திப்பை மகிழ்ச்சியான நினைவாக மாற்றிக் கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட திரு. சூர்யா, ரசிகர்களை சந்தித்ததுடன், அவர்களுடன் நீண்ட நேரம் அன்புடன் கலந்துரையாடினார்.
ஒவ்வொரு ரசிகரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களின் நலன் குறித்து விசாரித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், ரசிகர்கள் அனைவரும் தங்களது செயல்பாடுகளில் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு, ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்று சூர்யா அன்புடன் அறிவுறுத்தினார்.
ரசிகர்களிடம் எந்தவிதமான பாகுபாடுமின்றி எளிமையாக பழகியதுடன், ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் கவனித்து அவர்களின் நலனை விசாரித்த சூர்யாவின் அணுகுமுறை, நிகழ்வில் பங்கேற்ற ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
25 மாவட்டங்களில் இருந்து சுமார் 2,000 ரசிகர்கள் பங்கேற்ற இந்த Photoshoot நிகழ்வு, சூர்யா மற்றும் அவரது ரசிகர்களுக்கு இடையேயான அன்பையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

A grand Photoshoot event organised by the All India Suriya Welfare Movement witnessed the enthusiastic participation of around 2,000 fans from 25 districts across Tamil Nadu.
Bringing together a large number of Suriya fans under one roof, the event was filled with excitement and enthusiasm. Fans who travelled from different districts had the opportunity to meet their favourite actor and capture memorable moments with him through the special Photoshoot.
Suriya, who attended the event, spent time interacting with his fans and personally enquired about their well-being. His gesture of meeting each fan individually and speaking to them with warmth and affection left the fans delighted and deeply moved.

During the interaction, Suriya also advised his fans to always make safety their priority and to conduct themselves with discipline and a strong sense of responsibility in all their activities.
His simple and warm approach towards his fans, along with the personal attention he extended to each one of them, created an emotional and memorable atmosphere at the event.
With around 2,000 fans representing 25 districts, the grand Photoshoot became a special celebration of the bond and affection shared between Suriya and his fans.









