நடிகை ஆரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘ஒன் வே’ திரைப்படம்

நடிகை ஆரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘ஒன் வே’ திரைப்படம்

தயாரிப்பாளர் ராஜாத்தி பாண்டியன் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஒன் வே’..!

இப்படத்தில் நடிகர் பிரபஞ்சன் முன்ணனி கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.  நடிகை ஆரா இவருக்கு சகோதரியாக நடித்திருக்கிறார். ‘கோலமாவு கோகிலா’ பட வில்லன் வினோத் இதில் எதிர்மறையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகை கோவை சரளா மிக முக்கியமான வேடமேற்றுள்ளார். மேலும் பவா செல்லதுரை, ஹஷி குமார், ரவீந்த்ரா, திவ்யங்கனா ஜெயின், அப்துல்லா, தோனி, சுர்ஜித், பில்லி மற்றும் கிரிஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் தேசிய விருது பெற்ற பெங்காலி சினிமாவில் புகழ் பெற்ற பருன் சந்தா, கௌதம் ஹால்டர் மிக இருவரும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்கள்.

தயாரிப்பு – ராஜாத்தி பாண்டியன், எழுத்து, இயக்கம் – M.S.சிவக்குமார், கதை – பிரபஞ்சன், இசை – அஷ்வின் ஹேமந்த், ஒளிப்பதிவு – முத்துக்குமரன், படத் தொகுப்பு – சரண் சண்முகம், சண்டை இயக்கம் – விக்கி, ஒலியமைப்பு – கண்ணன், ஒப்பனை – மாரியப்பன், உடைகள் வடிவமைப்பு – ராஜன், புகைப்படங்கள் – மகேஷ், பாடல்கள் – மகாகவி பாரதியார் கவிதைகள், முத்தமிழ், திவ்யா கோர்தி, பாடியவர்கள் – சின்மயி, சுந்தரய்யர், கௌதம் பரத்வாஜ், ஜெயல‌ஷ்மி கோபாலன், கிராபிக்ஸ் – கார்த்திக் சந்திரசேகர்,  விஷுவல் எஃபெக்ட்ஸ் தலைமை – பிரபு, பின்ணனி ஒலிக் கலவை – அபிஷேக் தர்ஷன்.

இப்படத்தை இயக்குநர் M.S.சக்திவேல் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் தன் முதல் படைப்பான ‘மைதானம்’  மூலமாக விமர்சகர்களின் ஒட்டு மொத்த கவனத்தையும்  ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை ஆரா நடித்திருக்கிறார். இவர் ஏற்கெனவே பைசா என்ற படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இவர் ‘ஒன் வே’ மற்றும் ‘குழலி’ என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

actress aaraa

இந்த ‘ஒன் வே’  படம் குறித்து நடிகை ஆரா பேசும்போது, “ஒரு நடிகையாக இந்தத் திரையுலகத்தில் எனது பயணத்தை தொடங்கியபோதே நல்ல தரமான, அழுத்தமான கதையுள்ள, படங்களில்  கனமான கதாப்பாத்திரங்களில்தான் நடிக்க வேண்டுமென தீர்மானித்திருந்தேன்.

நான் நினைத்த மாதிரியான கதையமைப்புடன் கூடிய கதாபாத்திரம் இந்த ‘ஒன் வே’ படத்தில் எனக்குக் கிடைத்திருப்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.

நான் இப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தின் தங்கையாக, கோவை சரளா மேடமுடைய மகளாக நடிக்கிறேன். கோவை சரளா மேடமுடன் இப்படத்தில் நடித்தது மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவம்.  பல்வேறு ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான படங்களில், நம் மனங்களை கொள்ளை கொண்ட நடிப்பை தந்தவர் கோவை சரளா மேடம்.

இவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தும், அவர் என்னிடம் வெகு இயல்பாக,  எளிமையாக பழகினார். அவருடன் நடித்த தருணங்கள் எப்போதும் வாழ்வின் இனிமையான மறக்க முடியாத தருணங்களாக இருக்கும். ‘ஒன் வே’ திரைப்படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் இத்திரைப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும்…” என்றார்.

படத்தின்  இறுதி கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் வெளியீடு  ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்புடன் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

Our Score