கவின்-அம்ரிதா ஐயர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம்..!

கவின்-அம்ரிதா ஐயர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம்..!

ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி  தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘லிப்ட்’.

இந்தப் படத்தில் ‘பிக்பாஸ்’ கவின் நாயகனாக நடிக்கிறார். இது இவர் நாயகனாக நடிக்கும் 2-வது படமாகும்.  கவினுக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்திருக்கும் நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். மேலும் பல முக்கிய நடிகர், நடிகைகள் படத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – எஸ்.யுவா, பின்னணி இசை, பாடல்கள் – மைக்கேல் பிரிட்டோ, சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம்.

இந்த ‘லிப்ட்’ படத்தின் கதையை வெகு வித்தியாசமாக எழுதி இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநரான வினித் வரபிரசாத். இவர் பல விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்.

படம் குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஹேப்ஸி, "ஒரு பாசிட்டிவான வார்த்தையில் டைட்டில் இருப்பது படத்திற்கே பாசிட்டிவாக இருக்கும். ‘லிப்ட்’ என்ற டைட்டில்  அப்படியொரு பாசிட்டிவ் எனர்ஜியைக் கொண்டுள்ளது.

இந்த ‘லிப்ட்’ படத்தின் ஜார்னர் திரில்லர் வகையைச் சார்ந்தது. படத்தின் கதை மீதும் படத்தில் பங்காற்றியவர்கள் மீதும் நான் மிகப் பெரிய நம்பிக்கை வைத்துள்ளேன். அந்த நம்பிக்கைக்கு நற்சான்றாக இத்திரைப்படம் சிறப்பாக உருவாகியிருக்கிறது.." என்றார் தயாரிப்பாளர் ஹேப்ஸி.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும்.