மீண்டும் திரைக்கு வரும் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படங்கள்..!

மீண்டும் திரைக்கு வரும் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படங்கள்..!

இந்தக் கொரோனா காலத்திய பிரச்சினைகளில் தமிழ்த் திரைப்படத் துறைக்கு ஏற்பட்டுள்ள பெரிய பிரச்சினை தியேட்டர்களுக்குக் கூட்டம் வராதது.

எப்படியாவது, எப்பாடுபட்டாவது தியேட்டர்களுக்கு மக்களைத் திரும்ப வரவழைக்கலாம் என்று திரைத்துறையினர் அனைவரும் கங்கனம் கட்டி உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதில் ஒன்றுதான் புகழ் பெற்ற பழைய திரைப்படங்களை மீண்டும் தியேட்டர்களில் திரையிடுவதுதான்.

இதன் முதல்கட்டமாக ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்று செல்வராகவனின் புகழ் பெற்ற திரைப்படங்களை இந்த வாரம் தியேட்டருக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தப் படங்களைப் பார்ப்பதற்கு கணிசமான அளவுக்குக் கூட்டம் வந்து கொண்டிருக்கிறது.

இதையடுத்து இதே போன்று புகழ் பெற்ற மற்றைய திரைப்படங்களையும், இப்போதே தியேட்டர்களுக்குக் கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்தத் தூசித் தட்டப்படும் படங்களின் லிஸ்ட்டில் கமல்ஹாசனின் ‘அன்பே சிவம்’, ‘அவ்வை சண்முகி’ ஆகிய படங்களும்,  சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ படமும், அஜீத்தின் ‘பில்லா-2’ படமும் அடக்கம்.

இதில் “அஜீத்தின் ‘பில்லா-2’ படத்தை வரும் பொங்கல் தினத்தன்று ‘மாஸ்டர்’ படம் திரையிட கிடைக்காத தியேட்டர்களில் திரையிடலாமா..?” என்று ஒரு உள்குத்தலோடு திரையிடல் வேலைகள் நடைபெற்று வருவதாகச் தியேட்டர்கள் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

எது எப்படியோ.. தியேட்டர்களுக்குப் படிப்படியாக கூட்டம் வரத் தொடங்கினால் நல்லதுதான்..!!!

Our Score