நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘அந்தகன்’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 25-ம் தேதி சென்னையில் துவங்கவிருக்கிறது.
நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் தயாரிக்கவிருக்கும் புதிய திரைப்படம் ‘அந்தகன்’. இந்தப் படம் ஹிந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்.
இந்தப் படத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். ஹிந்தியில் தபு நடித்த முக்கியமான கதாபாத்திரத்தில் தமிழில் சிம்ரன் நடிக்கவிருக்கிறார். மேலும் படத்தில் நடிக்கவிருக்கும் மற்றைய நடிகர், நடிகைளின் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. இந்தப் படத்தினை ‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் இயக்குநரான ஜே.ஜே.பிரடெரிக் இயக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 25-ம் தேதி சென்னையில் துவங்கவிருக்கிறது. சென்னையிலேயே ஒரு மாதம் நடக்கவிருக்கும் இத்திரைப்படம் அதன் பின்பு ஹைதராபாத், பாண்டிச்சேரி, வட இந்தியா என்று பல இடங்களிலும் பயணிக்கவுள்ளது.