full screen background image

‘நினைவெல்லாம் நீயடா’ படத்தில் நாயகியானார் மனீஷா யாதவ்..!

‘நினைவெல்லாம் நீயடா’ படத்தில் நாயகியானார் மனீஷா யாதவ்..!

‘இசைஞானி’ இளையராஜாவின் மயக்கும் இசையில் 1417-வது படமாக உருவாகி வருகிறது ‘நினைவெல்லாம் நீயடா’.

இந்தப் படத்தை லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராயல் பாபு பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கிறார்.

சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து நடிகை மனிஷா யாதவ் குறிப்பிடும்போது, “நான் நடித்த ‘வழக்கு எண்18/9’, ‘ஒரு குப்பை கதை’ போன்ற படங்கள் ரசிகர்களிடம் எனக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுத் தந்தன. அந்த வரிசையில் இந்த படம் என் நடிப்புத் திறமைக்கும் நடன திறமைக்கும் தீனி போடும் படமாக அமைந்திருக்கிறது.

இந்தப் படத்தின் கதையை இயக்குநர் ஆதிராஜன்  சொன்ன உடனேயே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதற்குக் காரணம்…. ஒரே கேரக்டருக்குள் பலவிதமான  கேரக்டர்கள் ஒளிந்திருக்கும் வித்தியாசமான வேடம் இது. இதுவரை இப்படி ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நான் நடித்ததில்லை. நிஜமாகவே எனக்கு சவாலான வேடம் இது.

அத்துடன் இளையராஜா சார் இசையில் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்ற என்னுடைய கனவும் இந்த படத்தில் நிறைவேறுகிறது. கண்டிப்பாக இந்த படத்தை காதலர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள் என்று நம்புகிறேன். நினைவெல்லாம் நீயடா’ ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்கும்” என்று குறிப்பிட்டார் மனிஷா யாதவ்.

 
Our Score