‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் 150-வது படமான ‘நிபுணன்’ திரைப்படம் வரும் ஜூலை 28-ம் தேதியன்று உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இது ஒரு கிரைம் திரில்லர் படமாகும்.
இந்த ‘நிபுணன்’ படத்தை ‘Passion Studios’ சார்பில் திரு.உமேஷ், திரு. சுதன் சுந்தரம், திரு. ஜெயராம் மற்றும் திரு. அருண் வைத்தியநாதன் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் பிரசன்னா, வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் சுருதி ஹரிஹரன் ஆகியோர் அர்ஜூனுடன் சேர்ந்து நடித்துள்ளனர்.
அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
புதுமுக இசையமைப்பாளர் நவீன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது சிறப்பான இசையில் படத்தின் பாடல்கள் மிகவும் அருமையாக இருப்பதாகவும், நிச்சயமாக மக்களால் பெரிதும் ரசிக்கப்படும் என்று படக் குழுவினர் கூறுகின்றனர்.
இந்தப் படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் ஒரு தனியார் பண்பலை வானொலி நிலையத்தில் நடைபெற்றது.