full screen background image

‘கோலி சோடா-2’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கும் நடிகர் சமுத்திரக்கனி

‘கோலி சோடா-2’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கும் நடிகர் சமுத்திரக்கனி

இரண்டாம் பாகங்கள் உருவாகும் சாத்தியம் அனைத்து வெற்றி படங்களுக்கும் அமைவதில்லை.

2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘கோலி சோடா’ படத்தின் கதை எல்லா மொழிகளிலும் படமாக்கக் கூடிய திறன் கொண்டது. இக்கதையம்சத்தில் இரண்டாம் பாகத்திற்கான திறனும், சாத்தியமும்  நிறைந்து இருந்தது.

அது போலவே சமீபத்தில் வெளியான ‘கோலி சோடா-2’ படத்தின் அறிவிப்பு, தமிழ்த் திரையுலகத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அறிவித்த நாளிலிருந்தே படப்பிடிப்பு முழு வேகத்தில் நடந்து வருகிறது.

இந்தப் படத்தை விஜய் மில்டனின் ‘Rough Note’ நிறுவனம் தயாரிக்கிறது. ‘கோலி சோடா- 2’-வில் திறமையான பல நடிகர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இது குறித்து இயக்குநர் விஜய் மில்டன் பேசுகையில், ”இந்தப் படத்தின் கதை நான்கு முதன்மை கதாபாத்திரங்களை சுற்றியே நடக்கும். அந்த நான்கு கதாபாத்திரங்களில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிக்கவுள்ளார்.

‘கோலி சோடா’வின் முதல் பாகத்தில் வந்து கலக்கிய ATM கதாபாத்திரத்தை போன்று முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் சமுத்திரக்கனியினுடையது. இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஒரு கான்ஸ்டபிள் கதாபாத்திரம் இது. அவரது தோற்றம் வித்தியாசமாகவும் பேசப்படும் விஷயமாகவும் இருக்கும். இதைத் தவிர மேலும் பல  ஆச்சரியங்கள் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. படப்பிடிப்பு மிகவும் திருப்திகரமாக நடந்து கொண்டிருக்கின்றது…” என்றார் உற்சாகமாக..!

Our Score