full screen background image

பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை பற்றிப் பேசும் ‘நரி வேட்டை’ திரைப்படம்

பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை பற்றிப் பேசும் ‘நரி வேட்டை’ திரைப்படம்

சேனல் ஆகாஷ் ஸ்டுடியோ என்னும் புதிய நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நரி வேட்டை’.

இந்தப் படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஆகாஷ் சுதாகர். நாயகியாக புதுமுகம் மகாலட்சுமி நடிக்க, இவர்களுடன் நெல்லை சிவா, போண்டா மணி, கிங்காங், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  

தயாரிப்பு – சேனல் ஆகாஷ் ஸ்டுடியோ, கதை, திரைக்கதை இயக்கம் – ஆகாஷ் சுதாகர், இசை – சார்லஸ் தனா, படத் தொகுப்பு – C.கணேஷ்குமார், மக்கள் தொடர்பு – செல்வரகு.

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்த ‘நரிவேட்டை’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஓர் ஊரில் முக்கியமான நான்கு பேரால் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். அந்தபெண்ணின் நிலை அடுத்து என்ன ஆனது, அந்த நான்கு பேரும் என்ன ஆனார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை,

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

IMG-20170925-WA0154

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி, ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் அசோக் லோதா.  ‘அய்யனார் வீதி’ பட இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தி பேசினார்கள்.

பொதுவாக போராட்ட களங்களில் மட்டுமே கலந்து கொள்கின்ற, பெரியவர் ட்ராபிக் ராமசாமி, இந்த விழாவில் கலந்து கொண்டார் என்றால் அது இயக்குநர் ஆகாஷ் சுதாகருக்காகவும் ‘நரி வேட்டை’ படத்தில் சொல்லப்பட்டிருக்கும் சமூக கருத்துக்காகவும்தான்.

இந்தப் படம் குறித்து ட்ராபிக் ராமசாமி பேசும்போது, “இன்றைக்கு பல நடிகர்கள் நிஜத்திலும் நடிச்சிட்டு இருக்காங்க. ஆனால் நான் நடிப்பை செயல்ல காட்டுறவன்.

traffic ramasamy 

சமூகத்துல நடக்கிற அவலங்களுக்கு எதிரா தனி ஆளா போராடினா மட்டும் பத்தாது. மொத்தமா ஒன்று திரண்டு போராடணும் என்பதைத்தான் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதே கருத்தை வலியுறுத்தி தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் ஆகாஷ் சுதாகர்.

இந்தப் படத்தில் இவர் நடித்துள்ள ‘வேம்புலி’ கேரக்டரை பார்க்கும்போது ‘ட்ராபிக் ராமசாமி’ என்கிற பெயரைத்தான் ‘வேம்புலி’ என்கிற பெயராக மாற்றிவிட்டாரோ என்று நினைக்கிறன். இந்தப்படம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, நம்மைச் சுற்றியிருக்கும் கொள்ளைக்கார கூட்டத்துக்கு சவுக்கடி கொடுக்கும்விதமாக இருக்கும் என நம்புகிறேன்…” என வாழ்த்தி பேசினார்.

வாழ்த்திப் பேசிய ஜாக்குவார் தங்கம், “இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘வேம்புலி வர்றான்’ பாடலுக்கு தியேட்டரில் பலரும் சாமியாட்டம் ஆடப் போவது உறுதி. இந்தப் படத்தின் ரிலீஸுக்கு என்னால் முடிந்த உதவிகளை தயங்காமல் செய்வேன். அது மட்டுமல்ல, தற்போது சிறு பட்ஜெட் பட தயாரிப்பளர்களை நட்டத்தில் இருந்து காப்பாற்றுவதற்கு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கிறோம்.

IMG-20170925-WA0142

இதன்படி சிறு பட தயாரிப்பாளர்கள் ரிலீஸுக்கு முன்பே எங்களிடம் படத்தை ஒப்படைத்துவிட்டால், தமிழ்நாடு முழுதும் உள்ள கேபிள் டிவிக்களில் ஒளிபரப்பும் முறையில் சுமார் ஐந்து கோடிவரை ஒரு படத்துக்கு வருமானம் பார்க்க முடியும். அதில் தயாரிப்பாளரின் பங்காக சுமார் இரண்டரை கோடி ரூபாய் இந்த முறையிலேயே கிடைத்துவிடும்.. இன்னும் நான்கு மாதங்களுக்குள் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது…” என்று படக் குழுவினருக்கு நம்பிக்கை ஊட்டும்விதமாக பேசினார்.

‘அய்யனார் வீதி’ படத்தின் இயக்குநர் ஜிப்ஸி ராஜ்குமார் பேசும்போது, “பல நரிகள் ஒன்று சேர்ந்தால் பலம் வாய்ந்த சிங்கத்தையே சாய்த்துவிடும் என்று ஜாக்குவார் தங்கம் சொன்னார். அவ்வளவு ஏன் ஒரே ஒரு நரி மட்டும்கூட தனது தந்திரத்தால் ஒரு சிங்கத்தை வீழ்த்திவிடும்.

இன்று இந்த விழாவில் இயக்குநரின் நண்பர்கள், ஊர்க்காரர்கள் என பலரும் வந்து ஆதரவாக நின்று வாழ்த்துகின்றீர்கள். ஆனால் வெறும் கைதட்டலுடன் இந்த விழாவுடன் அப்படியே இந்த ஆதரவு நின்றுபோய்விட கூடாது. நாளை இந்தப் படம் ரிலீசாவதற்குள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம். அப்போதும் இதே ஆதரவை ஒட்டு மொத்தமாக நீங்கள் அவருக்கு அளிக்க வேண்டும்.

‘பார்த்தால் பசி தீரும்’ என்று காமராஜர் சொன்னார். அதே மாதிரி நீங்க பார்த்துக்கிட்டே இருந்தால்தான் பசி தீரும். உலகமே எதிர்த்தாலும் ஊர்க்காரங்க துணையிருந்தால் எந்த மோதலையும் ஜெயிக்கலாம்…” என படக் குழுவினருக்கு உத்வேகம் ஊட்டியதுடன், ஊர் மக்களின் ஆதரவும் இயக்குனருக்கு தொடர்ந்து இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.  

இயக்குநர் (ஆகாஷ்) சுதாகர், கேன்சரினால் உயிர் நீத்த தனது மகன் ஆகாஷின் நினைவாக தனது பெயரை ‘ஆகாஷ் சுதாகர்’ என மாற்றிக் கொண்டவர். மகனின் கவிதைகளுக்கு இசை வடிவம் கொடுப்பதற்காகவே திரைப்படம் எடுக்க முன் வந்தவர். இந்த ‘நரி வேட்டை’ படத்தை முடித்த கையுடன், அடுத்ததாக ஒரு படத்தையும் இயக்கி முடித்துவிட்டு, இப்போது மூன்றாவதாக ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்ல.. ஆதரவற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் நடத்திவரும் காப்பகம் மூலம் படிக்க வசதி செய்து கொடுத்தும் வருகிறார். அந்த குழந்தைகள் தன்னை அன்போடு ‘அப்பா’ என்று அழைப்பதில் தனது சொந்த சோகத்தை மறக்கிறார் .

அந்த ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை, அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்றுள்ளது.

படம் மிக விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

Our Score